வேலூரில் -ரோட்டரி ஸ்ரீலங்கா தலைவர் பேட்டி

போலியோவை ஒழிக்க

0
146
Advertisement

ஸ்ரீலங்கா நாட்டு தலைவர் ரவீந்தரன்

Advertisement

ரோட்டரி சங்கங்கள் உலக அமைதிக்காகவும் போலியோவை ஒழிப்பதில் தங்களை முழுமையாக அற்பணித்து பணியாற்றி வருவதாக ரோட்டரி சங்கங்களின் ஸ்ரீலங்கா நாட்டு தலைவர் ரவீந்தரன் வேலூரில் பேட்டி:

ரோட்டரி சங்கங்கள் உலக அமைதிக்காகவும் போலியோவை ஒழிப்பதில் தங்களை முழுமையாக அற்பணித்து பணியாற்றி வருவதாக ரோட்டரி சங்கங்களின் ஸ்ரீலங்கா நாட்டு தலைவர் ரவீந்தரன் வேலூரில்செய்தியாளர்களிடம் கூறினார் .

ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரோட்டரி சங்கங்களின் ஸ்ரீலங்கா நாட்டு தலைவர் ரவீந்தரன் வேலூர் வருகை தந்தார் .அப்போது செய்தியார்களிடம் பேசிய ரவீந்தரன் ,

உலகமுழுவதும் 200 நாடுகளில் 30 ஆயிரம் சங்கங்கள் உள்ளதாகவும் இதுவரை முன்று மில்லியன் மக்களுக்காக சமூகப்பணிகள் செய்யப்படுள்ளதாகவும் அவர் கூறினார் ,

அனைத்து நாடுகளிலும் உள்ள ரோட்டரி சங்கங்கள் போலியோவை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .

பல்வேறு நாடுகளில் பல சமுக பிரச்சனைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது ,அதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க ரோட்டரி சங்கங்கள் முன் வந்து பணியாற்றுகின்றன .

சுகாதாரம் ,கல்வி ,குடிநீர் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்களுக்கு உதவ ரோட்டரி சங்கங்கள் செயல்படுகின்றன.

ஸ்ரீலங்காவில் 5 லட்சம் விவசாயிகளுக்கு பல்வேறு தொழிற் பயிற்ச்சி அளித்து அவர்களுக்கு வருமானத்தை பெருக்க ரோட்டரி சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார் .

SHARE
Rj suresh
வேலூர்