அறிவுசார்சொத்துரிமை-இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழகம், ஆந்திராபிரதேசம்,  கேரளா, கர்நாடகா

இராமகிருஷ்ணா
Advertisement

கோயமுத்தூர்

Advertisement

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் உயிரி அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்காக தேசிய அளவிலான “அறிவுசார்சொத்துரிமை” தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. இப்பயிற்சி அரங்கை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் கல்வியியல் இயக்குநர் டாக்டர் .ஏ .எபிநேசர் ஜெயக்குமார் துவக்கிவைத்தார்.

இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர் .திருமூர்த்தி வரவேற்புரையும், நிகழ்வின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார்.

கோவை வன மரபியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் முருகேசன், தலைமையுரை நிகழ்த்தி பேசும் பொழுது மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் வனமரபியல் நிறுவனம் ஆகியன இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் விதம், உயிரி தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், இது வரை வனம் சார்ந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகபெறப்பட்டுள்ள அறிவுசார்சொத்துரிமை மற்றும் காப்புரிமைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியுடன் வன அறிவியல் தொடர்பாக புரிந்துணர்வு மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளபட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி மதுமிதாதாஸ் குப்தா, டாக்டர் யமுனா, வழக்குரைஞர் முத்துசெல்வம், பேராசிரியர்கள் டாக்டர்கார்த்திகேயன், டாக்டர்.முத்துமணி, டாக்டர்ஆர்.திருமூர்த்தி, டாக்டர்பரிமேலழகன், ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தமிழகம், ஆந்திராபிரதேசம்,  கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சார்ந்த சுமார் 120 ஆய்வு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கல்லூரி துணை முதல்வர் டாக்டர் எஸ்.தீனா பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119