அறிவுசார் சொத்துரிமை-ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

புதிய கண்டுபிடிப்புகளை  மேற்கொள்ளவும், காப்புரிமை பதிவு செய்யவும்

Advertisement

கோயமுத்தூர்

Advertisement

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதி உதவியுடன் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக மாநில அளவிலான “அறிவுசார் சொத்துரிமை” தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைப்பெற்றது.

இப்பயிற்சி அரங்கை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் கல்வியியல் இயக்குநர் டாக்டர்.ஏ.எபிநேசர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி திரு ரவீந்தர் கவுர் தலைமை வகித்து பேசுகையில், மத்திய மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றங்கள் இந்திய ஆராய்ச்சியார்கள் அறிவுசார் தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமை பெற ஆற்றி வரும் பங்கை விவரித்ததுடன், கோவையை சார்ந்த தொழில் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசின் ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தி மேலும் புதிய கண்டுபிடிப்புகளை  மேற்கொள்ளவும், காப்புரிமை பதிவு செய்யவும் அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர்.ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

டாக்டர் ஆர்.ரமணன், திருமதி சகிலா, திரு.அகிலன், திரு ஒக்குபிரசாத ராவ், திரு.டி.ஸ்ரீனிவாசன், டாக்டர்.பழனிவேலு, டாக்டர.ஆர்.திருமூர்த்தி ஆகியோர் பயிற்சியாளார்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 150 கல்லூரி ஆசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எஸ்.தீனா நன்றி கூறினார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119