கச்சத்தீவில் இந்திய தேசியக்கொடி…

ராமேஸ்வரம் உள்பட 12 தீவுகள்

Advertisement

இந்து மக்கள் கட்சி

Advertisement

கச்சத்தீவை மீட்கும் நோக்கத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 15-ம் தேதியில் கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது…! 

அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள்:-  

கச்சத்தீவை மீட்டிடுவோம்! தமிழக இந்துக்களின் பார்வைக்கு சில விவரங்கள்  வங்க கடலில் 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு ராமேஸ்வரம் உள்பட 12 தீவுகள் உண்டாகின. அத்தீவுகளில் சச்சத்தீவும் ஒன்று!!  ராமநாதபுரம் சமஸ்தானம் 1605ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அதில் 69 கடலோர கிராமங்களும் 7 தீவுகளும் சமஸ்தானத்திற்கு சேர்ந்தது. அதில் கச்சத்தீவும் ஒன்று.  ராமநாதபுரத்தை ஆண்ட கூத்தன் சேதுபதி மன்னரால் செப்புபட்டயம் வெளியிடப்பட்டது. அதில் தலைமன்னார் வரை உள்ள கடற்பகுதிகள் முழுவதும் சேதுபதி சமஸ்தானத்தை சேர்ந்தது என குறிப்பிட்டுள்ளன. 

1822-ல் கச்சத்தீவு கிழக்கிந்திய கம்பெனிக்கு ராமநாதபுர சேதுபதியால் குத்தகைக்கு விடப்பட்டது.  ராமநாதபுர சேதுபதி சமஸ்தானத்திற்கு சொந்தமான கச்சத்தீவு உள்பட நான்கு தீவுகளும் 8 கடற்கரை கிராமங்களும் மதுரை ஆட்சியாளர்கள் அவர்களால் அப்துல் காதர், மரக்காயர் மற்றும் முத்துசாமி பிள்ளை ஆகியோருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அது அரசு பதிவேட்டில் 23.06.1880-ல் பதிவு எண் 510/1880 புத்தகம் 1, பக்கம் 16ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 ராமநாதபுரம் அரசு பதிவேட்டில் 11.11.1958 பதிவு எண். 68ல் S.A.விஸ்வாதன் உதவி வருவாய் துறை அலுவலர் மதராஸ் என்பவரால் கச்சத்தீவு இராமநாதபுர கிராமத்திற்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நில அளவியல் பதிவேடுகளில் 1874 லிருந்து 1956 வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய நில அளவியல் துறை கச்சத்தீவின் நில பரப்பு 2.85 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை நில அளவை எண் 1250 என்று பதிவு செய்யப்பட்டு என்று உள்ளது

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119