சென்னையில் முதல் போட்டி..! ரசிகர்களை மகிழ்விக்குமா இந்திய அணி..?

76
614
சென்னையில் முதல் போட்டி..! ரசிகர்களை மகிழ்விக்குமா இந்திய அணி..?
Advertisement

சென்னையில் முதல் போட்டி..! ரசிகர்களை மகிழ்விக்குமா இந்திய அணி..?

Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

தோனிக்குப் பிடித்த மைதானம், பிடித்த ரசிகர்கள். ரவிசாஸ்திரி, ‘தோனியிடமிருந்து பேட்டிங்கில் சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்,

இதனால் இந்த ஹை-வோல்டேஜ் ஒருநாள் தொடருக்கு எதிர்பார்ப்புகள் வலுவாக எழுந்துள்ளது.

இந்திய அணி வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெளிநாடு ஒருநாள் தொடர்கள் கொஞ்சம் சரியில்லாமல்தான் அமைந்து வருகிறது.

முடிவுற்ற, தங்களது கடைசி 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி தழுவியுள்ளது. 2016-ல் அயர்லாந்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

மாறாக இந்திய அணி தன் கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது, அனைத்தும் வெளிநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித் குறிப்பிடுவது போல் இந்திய அணி நிறைய ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக ஆடிவருகிறது, இது இந்திய அணிக்குப் பலம் சேர்க்கும்.

அதுவும் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் திறமைகள் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் என்று தெரிந்தும், அல்லது ஆஸ்திரேலியா பயப்படும் என்று தெரிந்தும்,

அவர்களுக்கு பதிலாக அனுபவம் அதிகம் இல்லாத சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர், இது ஒரு மிகத் தைரியமான முடிவாகும்.

அதே போல் முடிவு ஓவர்களில் பும்ரா சாதுரியமாக வீசுகிறார், வேறு ஒரு உயரத்துக்கு வந்துள்ள புவனேஷ் குமார் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்ற அளவில் பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இந்திய அணிக்கு உள்ளது. ஷிகர் தவண் விலகியது புதிய பிரச்சியை உருவாக்கியுள்ளது,

ரஹானே, ரோஹித்சர்மாவை தொடக்கத்தில் இறக்குவதா அல்லது ராகுலை அனுப்புவதா என்ற பிரச்சினையே அது,

குறிப்பாக மிடில் ஆர்டரில் ராகுல் சமீபத்தில் இலங்கையில் சொதப்பி 28 ரன்களையே எடுத்துள்ளார். மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், பாண்டியா, தோனி கையில் நடுவரிசை உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அபாய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரே பின்னால் மேக்ஸ்வெல், பாக்னர் அதிரடி தெரிவுகள் உள்ளன.

மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை அதிகம் இந்தியப் பந்து வீச்சு பார்த்ததில்லை. பந்து வீச்சில் கமின்ஸ், நேதன் கூல்ட்டர் நைல் ஆகியோருடன் சிக்கனம் காட்டும் பாக்னர் உள்ளார்,

லெக் ஸ்பின் தெரிவாக ஆடம் ஸாம்ப்பா உள்ளார், இவர்தான் தோனிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசி அவரது ஸ்ட்ரோக்குகளை முடக்கியவர்களில் ஒருவர்.

பிட்ச்:

பிட்சைப் பொருத்தவரையில் அதிக ரன்கள் எடுக்கும் பிட்சாகவே இருக்கும், ஞாயிறு மதியம் இடியுடன் கூடிய மழை என்று வானிலை கூறப்பட்டுள்ளது.

300+ ஸ்கோர் என்பது இப்போது சகஜமானது, எனவே விறுவிறுப்பான ஒரு தொடர் இன்று தொடங்கவுள்ளது.

ஜனவரி 2013-க்குப் பிறகு இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 321.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே காலக்கட்டத்தில் 13 போட்டிகளில் 1104 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 102, சராசரி 110.4.

சென்னையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி சாதிக்குமா…? பொறுத்திருந்து பார்ப்போம்..!

செய்திகள்: ரோகிணி

SHARE