சைரஸ் போன்சா வுக்கு ஆசியாவின் சிறந்த பயிற்சியாளர் விருது

35
518
சைரஸ் போன்சா
Advertisement
Advertisement

இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா, 2016-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கு 7 நாடுகளைச் சேர்ந்த 13 பயிற்சியாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிறந்த பயிற்சியாளராக போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போன்சாவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, உலக ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலத்தையும் வென்றது.

இதுதவிர ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளியும், இந்திய ஆடவர் அணி வெண்கலமும் வென்றது.

கடந்த ஆண்டு மேலும் பல போட்டிகளில் இந்திய அணி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பரபரப்பான செய்திகளுக்கு http://policecheithi.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SHARE