ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “இயற்கை” பற்றிய சொற்பொழிவு..!

0
150
ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “இயற்கை” பற்றிய சொற்பொழிவு..!
Advertisement

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “இயற்கை” பற்றிய சொற்பொழிவு..!

Advertisement

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் இயற்கை மன்றம்  இணைந்து நடத்திய “இயற்கை” பற்றிய சொற்பொழிவு, பெற்றது.

‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர், பிரிக்கால் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைவர் –

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை திருமதி. .வனிதா மோகன் சிறப்பு விருந்தினர்

கல்லூரியின் முதல்வர் முனைவர். என்.ஆர்.அலமேலு அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

கல்லூரியின் இயக்குனர் முனைவர் திரு. ஏ.எபினேசர் ஜெயக்குமார் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

திருமதி.வனிதா மோகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையின்போது,

” நாம்  ஒவ்வொருவரும் நமது ஆக்ஸிஜன் தேவைக்காக குறைந்தது ஒரு மரமாவது நடவேண்டும். 

தங்கத்தை விட விலை அதிகமானதாக தண்ணீர் மாறக்கூடிய காலகட்டத்தை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம்.

                                        

ஆகவே, இயற்கையைப் பாதுகாக்க நாம் முயற்சி செய்யவேண்டும். இயற்கையைக் காக்க நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்,

இயற்கையானது  நம் வருங்காலத்தை காக்க 10 அடி  எடுத்து வைக்கும். 

மேலும் அவர் பேசுகையில், மழை நீரை சேகரிக்க வேண்டியதின் அவசியத்தையும்,

பள்ளி,கல்லூரி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மழைநீரை சேகரிக்க சிறுதுளி அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளை பற்றியும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவின் இறுதியில், கணிப்பொறித் துறைத்தலைவர் முனைவர். திருமதி. கிரேஸ் செல்வராணி அவர்கள் நன்றி உரையாற்றினார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE