சிலைக்கடத்தலில்…. நிரபராதிகள் பாதிக்க கூடாது

திரு.வேணுஸ்ரீநிவாசன்

திருப்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அழைக்கிறார் அர்ஜுன்சம்பத்...!
Advertisement

அர்ஜுன்சம்பத்

Advertisement

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்த் துறைத் தலைவர் பொன்மாணிக்கவேல்  அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கோரிக்கை ஒன்றை விடுவித்துள்ளார்…

அந்த மனுவில் கூறியுள்ளதாவது :-

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்த் துறைத் தலைவர் திரு.பொன்மாணிக்கவேல் ஐயா அவர்களின் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் உபயதாரர்கள் அறங்காவலர்கள், நேர்மையான அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் கருவறையில் பூசை செய்யும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் அச்சப்பட்டு தங்கள் கெளரவத்தை காப்பாற்றிக்கொள்ள் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இது ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவரும் உபயதாரருமான TVS குழுமங்களின் தலைவர் திரு.வேணுஸ்ரீநிவாசன் அவர்கள் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொங்கு மக்களின் ஒரு பிரிவினரான சாத்தந்தை கூட்ட குலதெய்வக் கோயில் அருள்மிகு ராஜா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோயில் வழக்கில் திருப்பணிக் குழு உறுப்பினர்களாகவும், சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களாகவும் உள்ள 9 பேர் மீது சிலை கடத்தல் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது வருந்தத்தக்கது.

அறநிலையத்துறை

இனி வரும் காலங்களில் திருக்கோயில் திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் கிடைப்பது அரிதாகிவிடும். ஏற்கனவே உபயதாரர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுகின்றனர். தற்போது கோயிலுக்கு உபயமும் செய்து உபத்திரவமும் அணுபவிக்க யாரும் முன்வர மாட்டார்கள்.

குற்றத்தோடு தொடர்புடைய எவரையும் கைது செய்வதை வழக்கு போடுவதை இ.ம.க ஆதரிக்கின்றது. ஆனால் உபயதாரர்கள் அச்சப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இதனை ஐயா பொன்மாணிக்கவேல் அவர்களும் காவல் துறையும் உணர வேண்டும். இதே போல இனி ஸ்தபதிகள் சிலை செய்வதற்கு முன்வருவார்களா என்பதும் சந்தேகமே! கோயில் சிற்பம் செய்யும் ஸ்தபதிகள் மதிப்பு மிக்கவர்கள் பாரம்பரியமாக இந்த புண்ணிய காரியத்தை செய்து வருபவர்கள்.

திரு.முத்தய்யா ஸ்தபதி அவர்கள் கைது என்பது காஞ்சி காமாட்சியம்மன் கோயில் விசயத்தில் சாத்தியப்பட வில்லை என பழநி கோயில் விசயத்தில் கைது செய்துள்ளனர். நேர்மையான, பாரம்பரியமான ஸ்தபதிகள் தற்பொது சிலை செய்ய வருவார்களா எனும் சூழல் உருவாகியுள்ளது.

இதே போல ஒட்டு மொத்த அறநிலையத் துறை உயர் அதிகாரிகளும், ஊழியர்களும், பணியாளர்களும் ஊழல் வாதிகள் அல்ல. திருக்கோயில் கருவரையில் பணியாற்றும் சாவியை தங்கள் கையில் வைத்துக்கொள்ளும் பாரம்பரிய உரிமை பெற்ற அர்ச்சகர்கள் ஆகியோர் தற்போது தங்கள் பணியை செய்திட அஞ்சுகின்றனர். ஒரு நிரபராதிக்கு கூட அநீதி இழைக்கப்பட்டு விடக்கூடாது.

            காவல் துறையின் நேர்மையான, திறமையான அதிகாரி திரு.பொன்மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல வழக்குகளில் துப்பு துலங்கின. குறிப்பாக இராராஜ சோழன் சிலையை மீட்டு வந்தார்.

இதற்காக திரு.பொன்மாணிக்கவேல் அவர்களை பாராட்டுகிறோம். இப்பிரிவிலிருந்து இவரை மாற்றும் முயற்சியை முறியடிக்க எப்போதும் துணை நிற்போம்.

நீதி மன்றத்தின் மேற்பார்வயில் திரு.பொன்மாணிக்கவேல் அவர்களின் சட்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது ஓய்வு பெற்ற பிறகு இவரையே அறநிலையத்துறை ஆனையராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எப்போதும் திரு.பொன்மாணிக்கவேல் அவர்களின் நேர்மைக்கும் திறமைக்கும் தலை வணங்குகிறோம்.

ஆனால் தற்போது ஆன்மிகவாதிகளும், தர்ம சிந்தனையும் உள்ள நேர்மையான உபயதார

ர்கள் திருக்கோயில் திருப்பணி செய்வோர்கள் அச்சப்படும் சூழம் உருசாகியுள்ளது.

இதே போல நேர்மையாக தங்கள் கடமையைச் செய்கின்ற அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் உள்ளனர். நேர்மையற்ற மோசடி பேர்வழிகளை கைது செய்வ

 

தை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் தற்போது நேர்மையான அதிகாரிகள் கூட பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதே நிலை தான் ஸ்தபதிகளுக்கும், அர்ச்சர்களுக்கும், திருக்கோயில் பணியாளர்களுக்கும் உருவாகியுள்ளது.

இந்நிலைமையை மாற்றி அமைத்திட அய்யா திரு.பொன்மாணிக்கவேல் அவர்கள் உருதுணையாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நிரபராதிகள் இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, என்று குறிப்பிட்டுள்ளார்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119