போதகர் கொலையில்….! மறைக்கப்பட்ட உண்மைகள்….! வக்கீல் அதிசயக்குமார்…..! பரபரப்பு பேட்டி…!

போதகர் கொலையில்....! மறைக்கப்பட்ட உண்மைகள்....! வக்கீல் அதிசயக்குமார்.....!

Advertisement

போதகர் கொலையில் மர்ம முடிச்சுகள்….

Advertisement

தூத்துக்குடி…. போதகர் கனகராஜ் கொல்லப்பட்ட மர்ம முடிச்சுகள்….. வெளிச்சத்துக்கு வர பாடுபட்ட உண்மை விசுவாசிகள் பலர்…… குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் வருத்தமாகத்தான் உள்ளனர். காரணம்…?

pothkar kanakaraj

இந்த படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளமானது என்கிறார்கள்.
இது நீதிக்கு கிடைத்த முழு வெற்றி கிடையாது என்பது அவர்களின் ஆதங்கம்.
இது பற்றி….  இந்த மறைக்க முயன்ற கொலை வழக்க்கை C.B.I., மாற்ற வேண்டும் என்று மனு தாக்குதல் செய்த வழக்கறிஞர் அதிசயக்குமாரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

இத்தனை பிரச்சனைகளை கடந்தும் இன்று வரை த பெந்தேகோஸ்தே சபையில் மனித உரிமை மீறல்கள் … கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளாதது மிகவும் வருத்தமானதாகும்

பெந்தேகோஸ்தே சபை

இந்தியாவில் தமிழகத்தில் தூத்துக்குடியில் 1936ம் ஆண்டு சிலோன் பெந்தேகோஸ்தே சபை (CPM) என்ற பெயரில்துவங்கப்பட்ட சபையானது சபையின் விசுவாசிகள் மூலம் இன்று உலகமெங்கும் பரவலாக்கப்பட்டுள்ளது.

இச்சபையின் தலைமை அலுவலகம் சென்னை, இரும்பலூரில் செயல்பட்டு வருகின்றது.

இச்சபையின் ஊழியர்களுக்கு சபையின் முதன்மை பாஸ்டரால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான சபை விசுவாசிகளுக்கு உறுப்பினர் அட்டை ஏதும் வழங்கப்படுவதில்லை.

சபையின் விசுவாசிகள் மாதந்தோறும் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 10ல் 1 பங்கை காணிக்கையாக  கொடுப்பதை வைத்துதான் சபையானது செயல்பட்டு வருகின்றது.

ஊழியர்கள் செய்யும் தவறுகள்:

விசுவாசிகள் சபையின் ஊழியர்களிடம் கொடுக்கும் காணிக்கைக்கு ரசீதுகள்….வழங்கப்படுவதில்லை.

சபையின் விசுவாசிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையோ, காணிக்கைக்கு ரசீதோ கொடுக்காததினால், சபையின் விசுவாசிகள் தங்களது உரிமைகளை ஊழியர்களிடமோ, தலைமையிடமோ கேட்க முடியாதபடி வாய்கள் கட்டப்பட்ட நிலைமையில் உள்ளார்கள்.

ஊழியர்களின் பேச்சுக்கு எதிராக யாரேனும் நியாயத்தை பேசினால் அவர்கள் சபையை விட்டு நீக்கப்படுவதும், திருவிருந்து கொடுக்க மறுப்பதும், அவர்களது வீட்டிற்கு ஜெபம் செய்ய செல்வதை நிறுத்தியும் சபையை விட்டு ஓரங்கட்டப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி என்னைப் போல் நியாயத்தை கேட்கும் விசுவாசிகளுக்கு எதிராக பிரசங்கம் செய்யும்போது சபிப்பதும், இக்கல்லில் மோதினால் தேவனால் அழிக்கப்படுவார்கள், அவர்களுக்கு மரணமும், வாதையும் நிச்சயம் என்று ஜெபத்தில் முழங்குவார்கள்.

இதனால் விசுவாசிகள் அனைவரும் ஊழியர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காமலும், ஊழியத்தில் நடக்கும் அநீதிகளுக்கு வாய் திறக்காமலும் மெளனமாக இருந்து வருகின்றார்கள்.

அப்படித்தான் தூத்துக்குடி சென்டர் பாஸ்டர்  R.கனகராஜ் மரணமடைந்த அன்றும், அவரது உடலில் பல காயங்களை பார்த்தும் அது குறித்து கேள்வி கேட்காமல், பாஸ்டரின் மரணம் இயற்கையான மரணம் என்று உதவி பாஸ்டர் ஜான் தாமஸ் அறிவித்ததை கேட்டு எவ்வித வாய் பேச முடியாத ஜீவன்களாக தங்களது மனதில் பாரத்தை சுமந்து கொண்டு இருந்துள்ளார்கள்.

விசுவாசிகள் இவ்வாறு இருப்பதினால்தான் ஊழியர்களை மேலும், மேலும் குற்றம் செய்ய வைத்து ஒரு பாஸ்டரையே….! அடித்து கொலை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு தைரியத்தை ஊட்டியுள்ளது.

பாஸ்டர் கனகராஜின் மரணம் “இயற்கை மரணம் அல்ல” கொலை செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டுமென்று பலரும் குரல் எழுப்பும் வேளையில், கொலையாளியை காப்பாற்றுவதற்காக சில ஊழியர்கள், விசுவாசிகளின் காணிக்கை பணத்தை தவறாக பயன்படுத்தினார்கள்.

இதற்கு எதிராக கேள்வி கேட்பவர்களையும், புகார் கொடுப்பவர்களையும் பழிவாங்க துடித்தாரகள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்கள். சபையை நடத்தும் ஊழியக்காரர்கள்.

 பாஸ்டர் கனகராஜின் மரணத்திற்குபின்பு, தூத்துக்குடியில் பெரும்பான்மையான விசுவாசிகள்…! மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று புகார் அளித்து, பத்திரிக்கைக்கு பேட்டியும் அளித்தார்கள். அவர்கள் புகைப்படங்கள் பத்திரிக்கையிலும், வாட்ஸ்அப்பிலும் வெளிவந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் விசுவாசிகளுக்கு எதிராக சபை கூட்டத்தில் அவர்களுக்கு சாபத்தை போட்டும், அவர்களை சபையில் இருந்து விலக்கி வைக்க இன்றளவும் முயற்சித்து வருகின்றார்கள்.

மறைக்கப்படும் உண்மைகள்…..!

பாஸ்டரின்  உடலை பார்த்ததும், அவரது உடலில் இருந்த காயங்களை வைத்து காவல்துறைக்கு புகார் அளித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததினால் என்னை சபையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கி விட்டதாகவும் என்மீது மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று, பாஸ்டர் ஜான் தாமஸ் பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துள்ளார்.

இதனால் நான் சிறிதும் மனம்தளரவோ, பின்வாங்கவோ இல்லை எனக்கு எதிராக என்னை மிரட்டுவது போலத்தான், இவர்களது குற்றத்தை இவர்களுடன் சேர்ந்து மறைக்க முயற்சித்து, என்னைப்போன்ற விசுவாசிகளுக்கு எதிராக…..!
சபையை நடத்தும் ஊழியர்கள் தேவ வார்த்தைக்கு பதிலாக சாபத்தை பிரசங்கமாக்கி வருகின்றார்கள்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விசுவாசிகள் கருத்துக்களை கூறவோ, பேசவோ முடியாத நிலையில் சபையில் விசுவாசிகள் பரிதாபத்தில் உள்ளார்கள்.

இவர்களின் வீட்டிற்கு ஜெபிக்க போவதையும், யாரும் இவர்களுடன் பேசாதீர்கள் என்றும், திருவிருந்து ஆராதனையில் கலந்து கொள்ள கூடாது என்றும், வீட்டில் ஏற்படும் நல்லது, கெட்டதில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் சபையை நடத்தும் ஊழியர்கள் மிரட்டி வருகின்றார்கள்.

சபையை நடத்தும் ஊழியர்களின் இச்செயல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல் செயலாகும். சபையில் விசுவாசிகளுக்கு எதிராக மனித நேயத்திற்கு அப்பால் நடக்கும் மனித உரிமை மீறலுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தின் கதவுகளையும் தட்டியுள்ளோம்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட,  பணம்…..!  பெண் விவகாரம்….! இதை மறக்கமுடியாத ஒன்று.

உண்மையின் பயணம் மெதுவாய்த்தான் இருக்கும்….! ஆனால் அதுதான் சத்தியமானது…!

மறைக்கப்படும் உண்மைகள்…..! கண்டிப்பாக வெளிவந்தே தீரும்….! என்றார் வழக்கறிஞர் அதிசயக்குமார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119