சென்னையில்..! நெல்லை சிறுவனுக்கு நினைவேந்தல்

Advertisement

ஆவடியில் மாபெரும் பட்டிமன்றம்

Advertisement

டாஸ்மாக் மது போதைக்கடிமையானவர்களை மீட்க, தமிழக அரசை வலியுறுத்தி சென்னை ஆவடியில் மாபெரும் பட்டிமன்றம் (மே-25) நடைபெற்றது.

இதில் தனது தந்தையின் மதுக்கொடுமையை கண்டித்து, தூக்குகயிறில் தன் உயிர் நீத்த தியாகச் செல்வன் நெல்லை  மாணவன் தினேஷ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் வருகின்ற சட்ட மன்ற கூட்டத்தில் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்க, பட்ஜெட்டில் 234 தொகுதிகளில், குடிகாரர்கள் குடியிலிருந்து மீட்க, மது மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்க அழுத்தம் கொடுக்கும் வகையில், நிகழ்ச்சி அமையப் பெற்றிருந்தது.

ஆவடி நகராட்சி அருகே நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்.

“அரசு மது மறுவாழ்வு இல்லங்கள் திறக்காததற்கு காரணம்,
நிதியா ?சதியா…?
என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில்  மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தலைவர்  செல்லபாண்டியன் , ஆறுமுகம் ,பத்மா பவுண்டேஷன் நிறுவனர்  ராஜ் குமார்,திரைப்பட இயக்குநர் ஆகாஷ் சுதாகர் ,  கவிதா,நஸ்ரின், கபாலி,  மோகன் ராஜ் ஆகியோரிடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர், கவிஞர் ஜோதி ராமலிங்கம் பட்டிமன்ற நடுவராக பொறுப்பு ஏற்று சிறப்பித்தார்.

“தமிழ் நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்” கலைச்செல்வி கணபதி,தலைமையில் நடைபெற்ற நெகிழ்ச்சிமிக்க பிரமாண்டமான மது விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், பல  சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119