பவளவிழா காணும்…..! இசைராஜா….!

‘இசைஞானி’ இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் 

Advertisement

‘இசைஞானி’ இளையராஜாவின் 75 வது பிறந்தநாள்

Advertisement

தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே  ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்த ‘இசைஞானி’ இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் இன்று, ராகதேவன் அவதரித்த இந்த இசைநாளில்…! அவரை நமது “தமிழ்செய்தி” வாழ்த்துவதில் பெருமையடைகிறது…!

நமது மண்ணின் மைந்தன், இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்வது ஒவ்வொரு தமிழ்னனுக்கும் பெருமை….!

  1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்து , இதுவரை 1000 க்கும் மேற்பட்ட படங்களில்  இசையமைத்துள்ளார்.

“கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என்று நாம் படித்தவை…..! ஆனால் இளையராஜாவின் பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவற்றை இன்று நாம் ரசித்தவை என்றால் மிகையாகாது.

விருதுகள்

இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் நமது ராஜா,

இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’

ஆனந்தவிகடனின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ S.S.வாசன் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

“பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியவர் இளையராஜா,பாரதமண்ணின் சப்தசுரங்களை…! பாமரனும் ரசிக்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான், இன்று பவளவிழா காணும் இசைராஜா…..!

பிறப்பு &  குடும்பம்

தேனி மாவட்டம்,  பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில் பிறந்தார்,
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார் இளையராஜா, இவருக்கு சூட்டியபெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்கள், சகோதரிகள் கமலாம்மாள், பத்மாவதி

சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார்.

ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார்.

வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார்.

தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார்.

பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

பிற இசையாக்கங்கள்

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை.

அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர்.

இளையராஜா – ஜீவா தம்பதிகளின் இசைச் செல்வங்கள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர், பவதாரிணி….!
பார் போற்றும் “பவழவிழா” நாயகன் இசைராஜா…! பல்லாண்டு…! பல்லாண்டு பல்லாயிரத்து நூற்றாண்டு இசை போல் இனிமையாக வாழ வாழ்த்துகின்றோம்….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119