ஆட்சி கவிழ்ந்தால் அடுத்த முதல்வர் இவரா…?

30
359
ஆட்சி கவிழ்ந்தால் அடுத்த முதல்வர் இவரா…?
Advertisement

ஆட்சி கவிழ்ந்தால் அடுத்த முதல்வர் இவரா…?

தலித் எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற சட்ட பேரவைத் தலைவர் பி.தனபாலை முதல்வராக்க டிடிவி தினகரன் திட்டமிட்டிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதற்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதால் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக,

19 எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்துள்ளனர்.

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமியை மாற்ற வேண்டும்.

வேறொரு முதல்வராக நாங்கள் முன்மொழிவோம். எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூற முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

சசிகலாவை நீக்கும் அளவுக்குச் சென்றுள்ளதால் ஆட்சியை மட்டுமல்ல, கட்சியையும் இழக்க வேண்டிவரும் என தினகரன் தரப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்கொண்டு கட்சி, ஆட்சி இரண்டையும் மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர சசிகலா குடும்பத்தினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 46 தனித் தொகுதிகள் உள்ளன. இதில் 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானது.

மொத்தமுள்ள 44 தலித் எம்எல்ஏக்களில் 30 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

எனவே, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பேரவைத் தலைவர் பி.தனபாலை முதல்வராக முன்னிறுத்தினால் இந்த 30 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியும்.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள தனபாலை முதல்வராக்க சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திவாகரன்,

கூவத்தூர் விடுதியில் நான் இருந்திருந்தால் பழனிசாமிக்கு பதிலாக தனபாலை முதல்வராக்கி இருப்பேன்.

சசிகலா அவசரப்பட்டு பழனிசாமியை முதல்வராக்கிவிட்டார் என கூறியுள்ளார்

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உள்ளது.

எனவே, அடுத்த முதல்வராக ஆவதற்கு அவைத் தலைவர் தனபாலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

செய்திகள்: ரோகிணி

Advertisement
SHARE