பொதுத்துறை வங்கிகளில் 3,562 காலியிடங்கள்…!

28
470
பொதுத்துறை வங்கிகளில் 3,562 காலியிடங்கள்…!
Advertisement

பொதுத்துறை வங்கிகளில் 3,562 காலியிடங்கள்…!

Advertisement

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’,

கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் 2017 – 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலியிடங்கள்: 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 3,562 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 2017௭ ஆக.1ன் படி 20 – 30வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம்.

ஆக., 16 முதல் செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்

பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

பிரிலிமினரி தேர்வு அக்., 7, 8 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும். மெயின்

தேர்வு நவ., 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 2017, செப்.5,

விரிவான விபரங்களுக்கு http://www.ibps.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..

தகவல்கள்: ரோகிணி

SHARE