குறட்டை தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா..?

35
1052
குறட்டை தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா..?
Advertisement

குறட்டை தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா..?

Advertisement

தற்போது பெரும்பான்மையானோருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று குறட்டை விடுவது… குறட்டை தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா..?

நம் தமிழ் பெண்களாவது கணவரின் குறட்டை சத்தத்தை சகித்து கொண்டு விடுகின்றனர்..

ஆனால் வெளிநாடுகளில் குறட்டை சத்தம் தாங்க முடியாமல் விவாகரத்து வாங்கிய மனைவிகளை பற்றி கேட்டிருக்கிறோம்..

ஒரு உறவையே பிரிக்கும் அளவிற்கு உள்ளது இந்த குறட்டை தொல்லை…

குறட்டையில் இருந்து விடுபட்டுவது எப்படி என்று பார்க்கலாமா..!

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக எளிதில் காற்று செல்ல முடியாமல் தடைபடுவதால், ஏற்படும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம்.

இது ஒரு வகை சுவாசக் கோளாறு பிரச்சனை என்பதால், இதற்கு உடனடி தீர்வு காண்பது சிறந்தது.

எனவே இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வினை கொடுக்கும் உணவுகள் இதோ!

ஆலிவ் ஆயில்

                                                

ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, தேவைபட்டால், அதனுடன் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

புதினா

குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். 

                                    

துவும் இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால், சிறப்பான பலனைப் பெறலாம்.

இல்லையெனில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

ஏலக்காய்

                                                    

தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூட குடித்து வரலாம்.

இந்த முறைகளை பின்பற்றினால் குறட்டையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக தூங்கலாம்… நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…

தகவல்கள்: சத்யா

SHARE