இன்றைய ராசிபலன்கள்

ராசிபலன்கள்

0
219
Advertisement

மேஷம் முதல் மீனம் வரைம்

Advertisement

ஸ்ரீஹேவிளம்பி, மார்கழி 5 ம்- நாள், புதன்கிழமை20.12.2017
சந்திராஷ்டமம்:- திருவாதிரை
———————————————————————————————-

மேஷம் :

புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நிர்வாகத்தில் இருந்த இழுப்பறி பிரச்சனைகள் குறையும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுவோருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : சுபச் செய்திகள் வரும்.
பரணி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கிருத்திகை : மக்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் :

புதிய சிந்தனைகள் மேலோங்கும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : கவனம் தேவை.
ரோகிணி : உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் :

மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு இன்று சாதகமான நாள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : காரிய சித்தி உண்டாகும்.
புனர்பூசம் : பணிகளில் கவனம் தேவை.

கடகம் :

வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். அந்நியர்களால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடம் அனுசரித்து செல்லவும்.கூட்டாளிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகளால் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

புனர்பூசம் : பேச்சுகளால் லாபம் அடைவீர்கள்.
பூசம் : பொருளாதார மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : தொழில் திறமை புலப்படும்.

சிம்மம் :

சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூ ரம் : பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : சங்கடங்கள் குறையும்.

கன்னி :

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் உண்டாகும். கால்நடைகளிடம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அமைதியாக செயல்படவும்.
அஸ்தம் : சுப விரயம் உண்டாகும்.
சித்திரை : கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும்.

துலாம் :

முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாகன பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சுழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

விருச்சகம் :

தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தொழிலை விருத்தி செய்வீர்கள். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : சாதகமான செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : விவாதங்களில் எச்சரிக்கை தேவை.

தனுசு :

வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் கீர்த்திகள் உண்டாகும். உயர் பதவி பெறுவதற்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் :

செய்யும் வேலைகளில் கவனம் தேவை. வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். பெரியோர்களின் ஆதரவினால் பூ ர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் :

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கு தன உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகளை கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
சதயம் : நட்பு வட்டம் விரிவடையும்.
பூரட்டாதி : நன்கொடையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம் :

அரசாங்கம் சம்பந்தமான அனுகூலமான தகவல்கள் வந்தடையும். சொத்து சேர்க்கை உண்டாகும். பணிகளில் மந்த தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : அனுகூலமான தகவல்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
ரேவதி : சாதகமற்ற சூழல் உண்டாகும்.

ஜோதிடர்:- பிரகாஷ் ஜெயராமன்