அரசு வேலை மோசடி மண்ணன் கைது

உமாபதி

0
99
Advertisement

ஆசை  வார்த்தை

Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாக பல  இளைஞர்களை  ஏமாற்றிய மோசடி மண்ணன் கைது

குடியாத்தம் கன்னகி தெருவை சேர்ந்த உமாபதி என்பவர் வேலையில்லாமல் சுற்றிதிரிந்து வந்த  நிலையில், திட்டம் போட்டு ஏமாற்றி பிழைப்பு நடத்தும்  நோக்கத்துடன் வேலையில்லா பட்டதாரி  இளைஞர்களை  குறிவைத்து அரசு  வேலை  வாங்கிதருவதாக  ஆசை  வார்த்தைகள் கூறி.

பல இளைஞர்களிடம்   ஏமாற்றி பல இலட்சம்  மோசடி செய்ததாக    உமாபதி என்பவரை குடியாத்தம் நகர காவல்துறையினர்  கைது செய்து  விசாரனை  நடத்தி வருகின்றனர்.

கைது  தகவல்  அறிந்து  உமாபதியிடம்  ஏமாற்றம்  அடைந்த பலர்  காவல் நிலையத்தில்  புகார்  கொடுத்தவன்னம்  உள்ளனர்.

இதுவரை  30, க்கும்  மேற்ப்பட்ட  பட்டதாரி  இளைஞர்கள்  புகார்  கொடுத்த  நிலையில்  அவர்  மீது  இந்திய தண்டனை  சட்டம்  420,  பிரிவின் கீழ் வழக்கு  பதிந்து  அவரை  சிறையில்  அடைத்தனர்.

வேலை வாங்கி கொடுப்பதாக  இவர் பலரை  ஏமாற்றியது  ஒருபுரம் இருக்க, தகுதி வாய்ந்தவர்கள்  பலர் வேலைக்காக   அரசை  நம்பி  காத்திருக்கும் நிலையில்  இது போல் குறுக்கு வழியில்  பணம் கொடுத்து வேலை வாய்ப்பை  தட்டி செல்ல நினைப்பதும் ஒரு வகையான குற்றமே என கூறுகின்றனர் சமுக ஆர்வலர்கள்.

SHARE
Rj suresh
வேலூர்