கொங்குநாடு கால்நடைத் திருவிழா

ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்வளாகத்தில்

Advertisement

வாணவராயர் மரபினர்

நமது நாட்டின் (கொங்கு) வரலாறு மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக சமட்டூர் வாணவராயர் மரபினர் பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் குடும்ப அங்கத்தினர்களால் இம்மண்ணின் பண்டைய வரலாற்றையும்கலாச்சாரத்தையும் பேனிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட வாணவராயர்ஃபவுண்டேஷன் பல வழிகளில் தனது பங்களிப்பை செய்து வருகிறது.

கால்நடைகளே கொண்டு நாட்டின் பண்டைக் காலப் பண்பாடு என்பதால் அதனைப்பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என்பதின் அடிப்படையில் கடந்த மூன்றுஆண்டுகளாகத் தொடர்ந்து கால்நடைத் திருவிழாவை இஃபவுண்டேஷன் நடத்தி
வருகின்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும்
மீன்வளத் துறையினருக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல்
பல்கலைக்கழகமும் பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர். இதற்கு பொது
மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு (2017) நடைபெற்றகால்நடைத் திருவிழாவில் 23 வகைகளைச் சேர்ந்த 570 கால்நடைகளும்,வேளாண்மை மற்றும் பால்பண்ணை உபகரணங்களும் கண்காட்சியில்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைப் பார்வையிட்ட 60,000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

இதனால் ஊக்கமடைந்த இவ்வமைப்பு வரும் (2018) பிப்ரவரி 9.10.11 ஆகிய மூன்றுநாட்கள் சமத்தூர், பெத்தநாயக்கனூர் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்வளாகத்தில் ;கொங்கு நாட்டுக் கால்நடைத் திருவிழா  என்ற விழாவை மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திருவிழாவில் 108 கோமாத பூஜைமற்றும் மாடுகள், குதிரைகள், ஆடுகள், நாடு நாய்கள் முதலியவற்றிக்கான அழகுப்
போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் வேளாண்மை மற்றும் பால்பண்ணைக்கான உற்பத்தி உபகரணங்களின்கண்காட்சியும் நமது பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119