அடுத்த கட்ட தலைமையை உருவாக்க தயாராகுங்கள்: வடக்கு முதல்வர் வேண்டுகோள்

0
227
Advertisement
Advertisement

தமிழ் மக்களின் எதிர்காலம் கருதிஅடுத்த கட்ட தலைமைத்துவத்தை உருவாக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ள வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன் இன்றைய அரசியல் தலைவர்களை காமராஜர் போன்று பின்னியிலிருந்து பாரிய தமிழர் அரசியல் இயந்திரத்தை இயக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண முதல்வர்

தமிழ்மக்கள் பேரவையின் விசேட கூட்டத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தனிப்பட்ட கட்சி பேதங்கள் அதிகார ஆசை தனிப்பட்ட விரோதங்களிற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் நவன்களை பாதிக்கும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்

தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்தே தன்னை முதலமைச்சராக நியமித்ததை நினைவுகூர்ந்துள்ள முதல்வர் கட்சித்தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக தறுதலைகள் மீது கண்ணும் கருத்துமாகயிருப்பதாகவும் ஊழல் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு கட்சி தலைமைகளே காரணமாகயிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பரவலாக்கம்பல்லினங்களின்சம்மதத்துடன்இடம்பெறவேண்டும்பெருபான்மையினரிடமிருந்து அவர்களின் கொடை சிந்தனையின் வெளிப்பாடக அமையக்கூடாது எனவும் வடமாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்:- இலங்கையிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர் 

SHARE