தமிழ் உள்ள வரை…

Advertisement

கலைஞர்….! கலைஞர் தான்..

Advertisement

ஓன்றாக இருந்த….!
புலமையையும் வறுமையையும்….!
பிரித்துக் காட்டிய பிதாமகன்… கலைஞர்….!

கலைஞர் எனும் ஆலமரத்தின் ஆணிவேர் மட்டுமே தான் பட்டு விட்டது…!

திமுக  ஒன்றே ஒன்று என இயக்கம் காத்து மறைந்த தன்னிகரற்ற தனித் தலைவர் கலைஞர்..!

வாழ்வில் நல்வினை தீவினை இரண்டையும் பார்த்தவர்!

முத்தமிழ் அறிஞராய் தமிழை காக்க களம் கண்டவர்களில்….! தமிழ் தாயின் ஆசியால் வளம் கொண்டவர் கலைஞர்…!

இன்று  இந்த உலகை மறந்து விட்டார்…. கலைஞர்….!  
மரபுகளை மாற்றம் செய்தவர்….!
வார்த்தைகளில் போதை ஏற்றியவர்..! 
சொல்லாற்றலை மட்டுமே கொண்டு….!
தமிழகத்தை ஐந்துமுறை ஆட்சி நடத்தியவர்…!

எவரும் எட்டா உயரமெல்லாம் தொட்ட கலைஞரின் கரகரத்த காந்தக் குரலில்….!

என் உயிரிலும் மேலான…..!   உடன்பிறப்பே…….!

இந்த வசிகரத்தை இனி எப்போது கேட்போம் என ஏங்கி நிற்பது உண்மைதானே….?

இப்படிப்பட்ட தலைவரை எண்ணிப்பார்த்தாலும்
எண்ணிக்கை கொள்ளாது!

ஆம்…!  கணக்கும் தாங்காது ! 
அரசியல் என்பது வேறு….! அந்த தர்பாரில் அவருக்குரிய தனித்தன்மையை விவாதிக்க….!
நமக்கு ஏழு ஜென்மம் வேண்டும்….!

மூச்சுக்காற்று முழுவதும் முரசொலியாக முழங்கிய மூத்த பத்திரிகையாளர்….!

அரசியலில் அவருக்கு ஆயிரம் கறைகள் இருக்கலாம்….! ஆனால் அவர் கட்டிக்காத்த தமிழில் கறையும்…..! கரையும்….! காணவே முடியாது….! 
அதனால் தான் கருணாநிதி….!
இறுதிவரை ஏன் தமிழ் இருக்கும் வரை கலைஞர்….! கலைஞர் தான்…!

கலைஞரின் இறப்பு,  தமிழ் போற்றும் உண்மை தமிழனுக்கு இழப்பு….!

தனித் தமிழனின் ஈடு செய்ய முடியாத இழப்பின் சோகத்தில் நமது ” தமிழ்செய்தி” தனது இரங்கல் செய்தியை பதிவு செய்வதில் துயரம் 
கொள்கிறது….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119