ஈஷா கிராம மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Advertisement

கோவை:

Advertisement

ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் இன்று
(ஜூலை 7) இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும்
மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம
மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு
மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு
வருகின்றன.

இந்த மருத்துவ முகாமில், பெங்களூருவில் அமைந்துள்ள பிரபல நரம்பியல்
மருத்துவமனையான NIMHANS நரம்பியல் வல்லுனர் டாக்டர். K.பாலாஜி
(Fellowship in Epilepsy, University of Melbourne, Australia) அவர்கள் கலந்துகொண்டார்.

சிறப்பு சிகிச்சைகள்

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், நரம்பியல்
சம்பந்தப்பட்ட நோய்கள், பல் மருத்துவம் ஆகியவற்றிற்கான சிகிச்சை
வழங்கப்பட்டது.

பல் சார்ந்த நோய்களுக்காக 43 பேரும், நரம்பு சார்ந்த நோய்களுக்காக 12
பேரும், பொது நோய்களுக்காக 145 பேரும் இந்த இலவச முகாமில் சிகிச்சை
மற்றும் ஆலோசனை பெற்றனர். மேலும் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற
பொதுவான நோய்களுக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119