ஈஷா அவுட்ரீச் மற்றும் ஆயுஷ் நடத்திய இலவச மருந்து

இரத்த சோகை

Advertisement

ஸ்ரீ விஸ்வேஸ்வரவித்யாலயா

ஈஷா அவுட்ரீச் மற்றும் ஆயுஷ் மருத்துவ திட்டம் இணைந்து நடத்திய இரத்த சோகை மருந்துவழங்கும் நிகழ்ச்சி மார்ச் 4ம் தேதி (ஞாயிற்றுகிழமை ) தொண்டாமுத்தூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரவித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈஷா அவுட்ரீச் மருத்துவர் Dr பரமேஸ்வரி, ஈஷா யோகா மையத்தின்சுவாமிநளதா,முன்னாள்TANSACஇயக்குனர்Dr.கிருஷ்ணமூர்த்தி,தொண்டாமுத்தூர் ஒன்றியபெருந்தலைவர்திருமதி வெண்ணிலா முத்துமாணிக்கம், வெள்ளிமலை பட்டினம் பஞ்சாயத்து தலைவர்திருகுழந்தைவேலு,இக்கரைபோளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு சதானந்தம், ஆகியோர்பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இரத்த சோகை நோயாளிகளுக்கு இலவச சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.

Dr. பரமேஸ்வரி

“ஈஷா யோகா மைய சுற்றுவட்டார கிராமங்களில், 13 கிராமங்களில் 3 மாதங்கள் இலவச மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது.

இதில் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 90க்கும்
மேற்பட்டோர் கண்டு பிடிக்கப்பட்டனர்.

இவர்களின் இரத்தத்தின் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை 4ல் இருந்து 10 வரை மட்டுமேஉள்ளது. பொதுவாக இரத்தத்தில் சிகப்பு அணுக்களின் சராசரி எண்ணிக்கை 12 இருக்கவேண்டும். அனால் இவர்களுக்கு மிக குறைவாக உள்ளது.

இவர்களுக்கு 3 மாதங்களுக்குஇலவசமாக சித்த மருந்துகள் வழங்குகிறோம். மேலும் 50 நாட்களில் இவர்களுக்கு மீண்டும்இரத்தப் பரிசோதனை செய்யப்படும்.

வெள்ளருக்கம்பாளையம், தீத்திபாளையம், செம்மேடு, நரசிபுரம், புத்தூர், தேவராயபுரம்,ஜாகிர்நாயகம்பாளையம், தானிக்கண்டி, மடக்காடு, விராலியூர், சந்தேகவுண்டன்பாளையம்,குப்பனூர், இக்கரைபோளுவாம்பட்டி மற்றும் மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இரத்த சோகை
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது, என்று கூறினார்.

Dr கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில், இரத்த சோகை நோயினால் பாதிக்கப்படுபவர்கள்அநேகமாக பெண்கள் என்றும் அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளரிளம்பெண்கள் இந்நோயினால் பாதிக்கப் படுகின்றனர் என்றும் கூறினார்.

இந்நோயினால் உடல்சோர்வு மற்றுமன்றி நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படுகிறது என்றார். இதனால் அடிப்படைஆரோக்கியம் குறைகிறது. கேழ்வரகு, கறிவேப்பிலை உள்ளிட்ட இரும்பு சத்து மிக்க உணவுகைகளை பயன்படுவது இரத்ததில் சிகப்பு அணுக்களை அதிகரிக்கும் என்றார்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119