விவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை

போராட்டம்

Advertisement

நீலகிரி தைல மரங்கள்

Advertisement

மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர், மஞ்சிக்குளம், நெடுங்குளம் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மழையை நம்பி தங்களது தோட்டங்களில் மல்லிகை செடிகள், நெல், கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்துள்ளார்

இந்த கிராம எல்லையையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பெய்யும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதற்காக நீர்வரத்து கால்வாய் உள்ளது.

வனத்துறை

கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் இப்பகுதியில் 1 லட்சத்திற்கும் மேல் நீலகிரி தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் அரசு புறம்போக்கு நிலங்களில் டிராக்டர் மூலம் வனத்துறையினர் புதிய வாய்க்கால்களை உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட, 5 கிராமங்களை சேர்ந்த மக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்து வரத்து கால்வாய் அருகே மழை நீரை தேக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர்.

ஆனால் தற்போது வனத்துறையினர் இந்த சமாதான உடன்படிக்கையை மீறி இந்த பகுதியில் டிராக்டர் மூலம் வாய்க்கால் உருவாக்கும் பணியை மீன்டும் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி கிராம மக்கள் அங்கு சென்று போராட்டம் நடத்திய பின்னர் அங்கு நடைபெற்ற பணிகள் நிறுத்தப்பட்டது.

விவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறையின் அடாவடித்தனத்தை அரசு கண்டுகொள்ளாத நிலை விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119