ஐந்தெழுத்து அதிசயம்

சிவாயநம

Advertisement

உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன .

அவற்றில் மிகவும் உயர்ந்தது  சிவாயநம எனும் மந்திரம் .

ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது . இனி ஐந்தெழுத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள் .!!!

(சி) — சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை , தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது . யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம் தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.

(வா)— வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி .உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.

(ய)– ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது , உடலில் உயிர் , சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம் , ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது , பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .

(ந)— பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது , மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,

(ம)— நீர் — ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் , ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி , ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது , பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது .

இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல் படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர், மூவுலகும் உங்களை பின் பற்றும் உன்னத நிலை அடையலாம் !!

சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை பிரம்ம மான ஈசனின் மருவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில் நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை எல்லாம் அவன் , எல்லாம் அவன் செயல்,,

ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான் என்பதை பார்ப்போம் .

1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை , வெட்கம் ,
போன்றவையாக செயல் படுகிறான்.

2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் , தாண்டுதல் குதித்தல்
போன்றவையாக செயல் படுகிறான் .

3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று, நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்
சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .

4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து ,நாதம்)
போன்றவையாக செயல் படுகிறான் .

5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று , எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,
போன்றவையாக செயல்படுகிறான் .

மேலும் உடல் உறுப்புகளில்
ஆகாயம்—– இருதயம்.
வாயு ——— நுரையீரல்.
அக்னி ——– பித்தப்பை .
அப்பு(நீர்)—– ஈரல் .
பிருத்திவி(மண்)— மண்ணீரல்.. போன்ற கருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .

1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .

2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.

3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .

4. பிரணவ தேகம், பார்வைக்கு தோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது , சித்தர் தேகம் மாகும் .

5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது , அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும் நம் உடலாகவும்
நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? எல்லாம் சிவமயம்

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119