துப்பறிவாளன் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு..!

359
935
துப்பறிவாளன் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு..!
Advertisement

துப்பறிவாளன் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு..!

Advertisement

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்.

திரையரங்கில் விற்கப்படும் சினிமா டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தனியாக ஒதுக்கப்பட்டு,

அது விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தனது துப்பறிவாளன் படத்தில் இந்த திட்டத்தை அவர் செயல்படுத்துகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

துப்பறிவாளன் படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது.

அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE