விவசாயிகளுக்கான மத்திய பயிர் காப்பீடு திட்டம்..!

103
1567
விவசாயிகளுக்கான மத்திய பயிர் காப்பீடு திட்டம்..!
Advertisement

விவசாயிகளுக்கான மத்திய பயிர் காப்பீடு திட்டம்..!

Advertisement

மத்திய பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைய, வரும், 15ம் தேதி வரை அவகாசம் இருந்தாலும்,

தொடர் விடுமுறைகள் வருவதால், 11ம் தேதிக்குள், பிரீமியம் செலுத்தி இணைய வேண்டும் என்று, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் பசல் பீமா யோஜனாஎனும், பயிர்க்காப்பீடு திட்டம், சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி இழப்பு ஏற்படும் போது, உணவு பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு உதவும் வகையில், பயிர்க்காப்பீடு திட்டம் அமலாகியுள்ளது.

விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

விதைக்க முடியாத நிலை ஏற்படுவது முதல், அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்புகளுக்கும், இத்திட்டத்தில் காப்பீடு பெறலாம்.

திருப்பூர் மாவட்டத்தில், காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, பருத்தி, சோளம், எள் ஆகிய வேளாண் பயிர்

களுக்கான காப்பீடு தொகை செலுத்தும் காலக்கெடு, வரும், 15ல் நிறைவடைகிறது.

விதைப்பு செய்ய முடியாத நிலையில் பாசி, எள், பயிறு ஆகியவற்றுக்கு, வரும், 31ம் தேதிக்கு பின் நிவாரணம் கிடைக்கும்.

எனவே, காப்பீடு திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஆக., 15ம் தேதிக்குள்,  பயிருக்கான காப்பீடு தொகையை செலுத்தி, காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களுக்கு, காப்பீடு திட்டத்தில் இணைய, செப்., 30ம் தேதி வரை வாய்ப்பு உள்ளது.

மக்காச்சோளத்துக்கு, ஏக்கருக்கு, 441 ரூபாய்; உளுந்து, பாசிபயறுக்கு தலா, 260; நிலக்கடலைக்கு, 463 ரூபாய்;

பருத்திக்கு, 1073 ரூபாய்; சோளம், 186 ரூபாய்; எள் பயிருக்கு, 208 ரூபாய்; வெங்காயம், 1,600 ரூபாய்; மஞ்சள், 3,150 ரூபாய் என் வழங்கப்படுகிறது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE