மாற்றுத்திறனாளி கைது- வேலூர் மாவட்ட ஆட்சியர் கோபம்

கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் ராமன்

0
93
Advertisement

வேலூர்மாவட்டம்

Advertisement

ஆற்காடு அருகேயுள்ள நம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராமதாஸ். அங்கு மணல் கொள்ளை நடப்பதாகவும், மேலும் ஏரியில் வண்டல் மண் திருட்டுத்தனமாக முறைகேடாக எடுக்கப்படுவதாகவும் புகார் பலமுறை ஆட்சியரிடம் திங்கள் மனு நாளில் புகார் செய்துள்ளார்.

ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் இன்று வேலூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்து கோபத்துடன் தங்கள் மனு மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அலைகழிக்கிறீர்களே என ஆவேசமாக பேசியுள்ளார்.

இதே போன்று அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளி ராமதாஸ் டேபிளை தட்டி பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் ராமன் இருவரையும் கைது செய்ய உத்தவிட்டதால் சத்துவாச்சாரி காவல்துறையினர்  கைது செய்து விசாரணைக்கு அழைைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம்-நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் மணல் மாமூல் வாங்கிய பிரபு கணேஷ்  வருகின்றன 30-06-2018 அன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் மீது மாவட்ட ஆட்சியர் அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதனையும் இந்நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுப்பாரா? எனவும்  பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் அய்யத்தை வெளிப்படுத்துக்கின்றனர்.

SHARE
Rj suresh
வேலூர்