இம்பூரல்-நல்ல மருந்து…..நம்ம நாட்டு மருந்து…

இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும் இம்பூரல்பி,த்த நீரைப் பெருக்கும்.

Advertisement

இம்பூரல்….

Advertisement

இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும் இம்பூரல். பித்த நீரைப் பெருக்கும். வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும். ஒரு அரியதொரு மூலிகை இம்பூரல்.

மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தழைத்து வளரும், இம்பூரல் முழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்டது. இன்புறா, சிறுவேர், சாயவேர் எனும் மாற்றுப் பெயர்களும் உண்டு.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் இரத்த வாந்தி கட்டுபடுத்த  இம்பூரல்ச் செடியை நன்கு கழுவி கைப்பிடியளவு எடுத்து,  நன்கு அரைத்து 10 கிராம் அளவு 200 மிலி பாலில் தினமும் இரு வேளைகளை குடிக்கலாம்.

இம்பூரலின் வேரைக் குடிநீராக்கி குடிக்க, வாயிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். இம்பூரல் மாத்திரைகளும் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவற்றையும் வாங்கி உபயோகிக்கலாம்.

இருமல் கட்டுபட இம்பூரல், வல்லாரை வகைக்கு 40கிராம் நசுக்கி ½ லிட்டல் நீரில் போட்டு 150மிலி ஆகக் காய்ச்சி 2 தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளைகளில் குடித்து வரவேண்டும்.

மார்பு எரிச்சல் குணமாக இம்பூரல் இலைச்சாற்றை சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

சளி கட்டுபட  வேரை நிழலில் உலர்த்தி, தூள் செய்து. 2 தேக்கரண்டி அளவு தூளைச் சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடையாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.

உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீர இம்பூரல் இலைச்சாற்றை எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வரவேண்டும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119