முட்டை சமையல்

48
623
முட்டை
Advertisement
Advertisement

பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை… ‘‘தினமும் முட்டை கொடுங்க!’’ என்பதுதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் ஏற்ற சரிவிகித உணவு முட்டை என்பதுதான் அதன் ஸ்பெஷல்! அதோடு, சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது என்பதுடன், அதை சமைப்பதும் எளிதுதான். 

1.முட்டை மசாலா டோஸ்ட்

1.முட்டை மசாலா டோஸ்ட்

தேவையானவை: 
 
முட்டை – 4,
பிரெட் – 5,
கரம் மசாலாதூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
இஞ்சி&பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
உப்பு – கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
(விருப்பப்பட்டால்) பூண்டு – 2 பல்,
சின்ன வெங்காயம் – 4 

செய்முறை: 

 
               பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள்.
 
பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள்.
 
மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.
 

2.முட்டை இடியாப்பம் மசாலா

தேவையானவை:
 
இடியாப்பம் (உதிர்த்தது) – 2 கப்,
முட்டை – 3,
சின்ன வெங்காயம் – 10,
நாட்டு தக்காளி – 3,
பூண்டு – 6 பல்,
மிளகாய்தூள் -ஒரு டீஸ்பூன்,
உப்பு -அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு. 
செய்முறை: 
 
             ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
 
தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள். 

கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.

 
நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
 
விருந்துகளில் வைத்துப் பாருங்கள். விசாரணைகள் தூள் பறக்கும்!
 

3.முட்டை & வெஜ் ஆம்லெட்

தேவையானவை:
 
முட்டை – 6,
முட்டைகோஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் (மூன்றும் பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன். 

செய்முறை: 

 
                    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
 
முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள்.
 
ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள். 

குறிப்பு:

முட்டையில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அடித்துக் கலக்கும்போது எப்படி அடித்தாலும் மஞ்சள்தூள் சிறு சிறு கட்டிகளாக நிற்கும்.
 
இதைத் தவிர்க்க, பாத்திரத்தில் முதலில் தேவையான மஞ்சள்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துவிட்டு, அதன் பிறகு முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால், உப்பு, மஞ்சள்தூள் கட்டியாகாமல் சீராகக் கரையும். 

ஈரமில்லாத பாத்திரத்தில் ஊற்றி அடித்தால், முட்டை நன்கு நுரைத்து வரும். 

 
 

 

SHARE