வாலி பால் இறுதிச் சுற்று துவங்கி வைத்தார் ஈஷா

வாலிபால் வீரர்களுடன் ஈஷா

Advertisement

ஈஷா சோழா கோப்பைக்கான வாலி பால் இறுதிச் சுற்று ஆதியோகி முன்பு நடைபெற்றது – இறுதி ஆட்டத்தை துவங்கி வைத்தார் சத்குரு.

Advertisement

 

ஈஷா  அவுட்ரீச் மற்றும் சோழமண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதி போட்டி  டிசம்பர் 21 ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதி யோகி திருவுருவச் சிலை  முன்பு  நடந்தது.

நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர்  சத்குரு அவர்கள்  சோழமண்டலம் குழுமதின் நிர்வாக இயக்குனர் திரு சுதிர் ராவ் அவர்கள்,   ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் திரு மோஹித் சவுஹான் அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று கொண்டிருக்கும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் (BSF) போட்டியை கண்டு களித்தனர்.

முதல் பந்தை அடித்து போட்டியை துவங்கினார் சத்குரு.

வாலி பால் இறுதி ஆட்டத்தில் கோவை நஞ்சுண்டாபுரம்  மற்றும்  புதுச்சேரி கலிதீர்த்தால்  குப்பம் அணிகள் மோதின. சத்குரு அவர்கள் பலத்த கரகோஷங்களுக்கிடையே   வாலி பால்   இறுதி  ஆட்டத்தின் முதல் பந்தை அடித்து போட்டியை துவங்கினார்.

வாலி பால் போட்டியில்  கோவை நஞ்சுண்டாபுரம் அணி 2 க்கு 1 என்ற செட் அடிப்படையில் புதுச்சேரி கலிதீர்த்தால்   குப்பம் அணியை வென்றது.

வாலி பால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி முதல் இடத்தையும்,  கலிதீர்த்தால்  குப்பம் அணி இரண்டாவது இடத்தையும், மத்வராயபுரம் அணி மூன்றாவது இடத்தையும் , கோபி  சாவுகாட்டுப்பாளையம் அணி  நான்காவது இடத்தையும் பிடித்தது.

த்ரோ பால் போட்டியில் கோவை பீளமேடு அணி முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. 2 வது இடத்தை கோபி முருகன் புதூர் அணியும் மூன்றாவது இடத்தை கோவை சின்னியம்பாளையம் அணியும், நான்காவது இடத்தை கடலூர் திருச்சோபுரம் அணியும்   பெற்றது.

 

வெற்றி கொண்டாட்டம்

சத்குரு அவர்களும், B S F ன் D I G (பயிற்சி துறை) திரு கார்க் அவர்களும்  வெற்றி பெற்ற  அணியினருக்கு ஈஷா சோழா  வெற்றி கோப்பையையும் பரிசு தொகையும்  வழங்கினர்.

 

இந்த விளையாட்டிற்கான காரணம்

 கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்  ஈஷா அவுட்ரீச் கிராம இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக  ஈஷா சோழா கோப்பைக்கான வாலி பால் மற்றும் த்ரோ பால் போட்டிகளை டிசம்பர் 9ம் தேதி முதல் தமிழகமெங்கும்  நடத்தியது.

சுமார் 700 கிராமங்களில்  இருந்து 320 வாலி பால் மற்றும் 58 த்ரோ பால் அணிகள் கலந்து கொண்டன. சுமார் 3500 ஆண்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அணிகளில் இடம்பெற்றனர்.

புதுச்சேரியிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,திருவண்ணாமலை,கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 நகரங்களின் கிராமப்புற அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளின் கால் மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் டிசம்பர் 20, 21ம் தேதிகளில் நடைபெற்றது .  அதனைத் தொடர்ந்து 21 ம் தேதி இறுதி சுற்று நடைபெற்றது .