பள்ளி, கல்வி, பயிற்சி….. செய்திகள்….

மாணவர்களுக்கு தினசரி தேர்வு

Advertisement

அரையாண்டு தேர்வு முடிந்தும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை:

புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டுத் துறையை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்தவு நடத்துவது தொடர்பாக எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு.

இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலத்துடன் மாநில மொழிப்பாடம் இடம் பெறும் – உச்ச நீதிமன்றத்தில் CBSE உறுதி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி; ஜனவரி 31க்குள் பெயர் பதிவு செய்திட சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் அறிவிப்பு.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமய கல்வி வழங்கப்படும்” – செங்கோட்டையன் தகவல்.

TNTET 2018 | நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த  ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10 வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்தால் கிராமப்புற ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு
“அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்” – கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு”

பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு கட்டணமாக, செய்முறை பாடங்கள் அடங்கிய மாணவர்களுக்கு, 225 ரூபாய்; செய்முறை அல்லாத பாட மாணவர்களுக்கு, 175 ரூபாய்; மதிப்பெண் பட்டியலுக்கு, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆறாவது ஊதியக்குழுவிலுள்ள ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி SSTA தொடர்ந்த வழக்கின் இறுதி ஆணை வரும்வரை பழைய ஊதியத்தில் தடையின்றி தொடர்ந்து பெற்று வழங்குதல் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்,புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்பு பணி நடந்துவருகிறது
வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம், கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது

எனவும் பின், அவர் கூறுகையில், ”மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. ”ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும்.

ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,” என்றார்.

செய்திகள்:- சு.வேலுமணி M.A.,B.Ed., தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம். 

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119