மின்னலைகள் மூலம் இதயத் துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம் துவக்கம்-கே.எம்.சி.எச்

அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம்சரிசெய்யப்படவேண்டியவை அல்ல.

Advertisement

எலெக்ட்ரோபிசியோலஜி (Electrophysiology) என்பது இதய மின்னோட்ட முறையில் ஏற்படும்கோளாறுகளை சரிசெய்யும் (arrhythmias) தொடர்பான இதயச் சிகிச்சையின் ஒரு பிரிவாகும்.

இந்நோயினால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் இதயம் மிக வேகமாகவோஅல்லது மிக மெதுவாகவோ, துடிக்கலாம். இவ்வகையான துடிப்பிற்கு சிகிச்சையளிக்காமல்விடப்பட்டால் இதயத்தின் சீரற்ற துடிப்பின் விளைவாக மயக்கம், மூச்சுத் திணறல், சிலசமயத்தில் மரணமும்கூட ஏற்பட வாய்ப்புண்டு.

இவ்வகை நோய்கள் (arrhythmias) “சீரற்றஇதயத் துடிப்புக் கோளாறுகள்” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இன்றைய அதிவேகவாழ்க்கை முறையினால், இதயத் துடிப்புக் கோளாறுகளும் வேகமாக அதிகரித்துவருகின்றன.

எனவேதான், கே.எம்.சி.எச் இதயசிகிச்சை மையம் இவ்வகை நோய்களுக்காக, தனிப் பிரிவைதொடங்கி, நோயாளியின் தேவைக்கு ஏற்ப திறமையான மருத்துவர்களையும்,
துணைமருத்துவப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. மெதுவான இதயத் துடிப்பைச்
(Bradycardia) சரிசெய்வதற்கு, நிரந்தர பேஸ் மேக்கர் கருவி (அதிநவீன எம்.ஆர்.ஐ-செய்யும் வசதிகொண்ட பேஸ் மேக்கர் கருவி) பொருத்தப்படுகிறது. அதிவேக இதயத் துடிப்பைக் கொண்ட(Tachycardia) நோயாளிகளை சோதனை செய்து, அவர்களது தேவையை துல்லியமாகக்கணக்கிட, கதிர்வீச்சு அதிர்வெண் கொண்டு செயல்படும் அதிநவீன முறையும்பின்பற்றப்படுகிறது.

டாக்டர்நல்ல ஜி பழனிசாமி

சீரான இதயத் துடிப்பை பாதிக்கும் மிகச் சிக்கலான நோய்களையும்கண்டறியும் வகையில் முப்பரிமாணத்துடனான 3D electroanatomic முறை இங்குள்ள
எலெக்ட்ரோபிசியோலஜி துறையினால் கையாளப்படுகிறது. தமிழகத்திலேயே மிக அதிகஅளவில், சிக்கலான இதய அறுவைச் சிகிச்சைகளையும், மாரடைப்பைத் தவிர்ப்பதற்காகஉடலின் உட்பொருத்து கருவிகள் முறையிலான சிகிச்சைகளையும் இந்த மையம் சிறப்பாகசெயல்படுத்திவருகிறது.

இங்கு எலெக்ட்ரோபிசியோலஜி துறை (Electrophysiology Department) ஆற்றும் அரும் பணி“இப்போதைய காலத்திற்கு தேவை” என்கிறார் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர்நல்ல ஜி பழனிசாமி அவர்கள். இன்றைய மக்களின் வாழ்க்கை தற்போதைய “வாழ்க்கைமுறை நோய்களால்” நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கே.எம்.சி.எச் மருத்துவமனைநோயாளிகளுக்குத் இக்கால சூழ்நிலைக்கு கேற்ப சிகிச்சையை அளிக்கும் பொறுப்பைஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம்சரிசெய்யப்படவேண்டியவை அல்ல.

அறுவைச் சிகிச்சை செய்யாமல் மருந்துக்களினால்சரிசெய்யக்கூடிய நோய்களும் உள்ளது. இதயத் துடிப்பை சீர்படுத்தினால் போதும்,அனைத்துவகை தேவைகளையும் சரியான நேரத்தில் நிறைவேற்ற மின்னுடலியல்துறை(Electrophysiology Department) என்றும் தயாராக உள்ளது எனக்கூறினர்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119