11.44 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து..!

33
437
11.44 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து..!
Advertisement

11.44 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து..!

Advertisement

ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது போன்ற பான் எண்கள் கண்டறியப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி.

இந்த விதி மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 1566 போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவைகள் போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டதாகும் என தெரிவித்துள்ளார்.

SHARE