கருவாடு

35
611
கருவாடு
Advertisement
Advertisement

நம்ம ஊரு கருவாடு குழம்பு – எப்படிங்க செய்றது ?
புதுசா தெரிஞ்சிக்க ஒன்னுமில்லங்க !

எப்பவும் போல என்ன என்ன வேணுமோ அதையெல்லாம் வாங்குங்க ,
நாங்க சொல்லற மாதிரி செய்ங்க அசத்துங்க !!

சமைக்க தேவையானவை

கருவாடு – 200 கிராம்
கத்திரிக்காய் – 1/4 கிலோ

உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2

தக்காளி – 2
புளி – சிறிது

எலுமிச்சை சாறு சிறிது அளவு
(நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)

கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் தேவையான பொருகளை அரைத்து கொள்வோம்
சின்ன வெங்காயம் – 1

கையளவு மல்லி தூள் – 50 கிராம் 

சீரகம் – 1/2 ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்
வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 4 பள்
துருவிய தேங்காய் – 1/4 கப்

எப்படி செய்வது

ஒரு வாணலியை அடுப்பில் வைத்துகொள்ளவும் – அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

பிறகு அவற்றை குளிர வைத்து அம்மியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .
பிறகு கருவாட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதில் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். காய்களானது நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
புளிச்சாறு நன்கு கொதித்ததும், அதில் சுத்தம் செய்த கருவாட்டை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு,
சிறிது நேரம் கழித்து இறக்கினால் சுவையான கம கம கருவாட்டு குழம்பு தயார் !.

சாப்பிடுங்க நல்லா இருந்தா கூரியர்ல அனுப்பாதீங்க !!!

SHARE