திமுக வின் முரட்டு பக்தர் காலமானார்…!

31
518
திமுக வின் முரட்டு பக்தர் காலமானார்…!
Advertisement

திமுக வின் முரட்டு பக்தர் காலமானார்…!

Advertisement

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமானவர் என்.பெரியசாமி.திமுக வின் முரட்டு பக்தர் காலமானார்…!

இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர்.

தி.மு.க தலைவர் கருணாநிதியால், ‘முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்டவர்.

பெரியசாமியின் மகள்தான், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி எம்எல்ஏ-வுமான கீதா ஜீவன்.

கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்தார் பெரியசாமி. அவருக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

பெரியசாமியின் மறைவுக்கு தி.மு.க சார்பில், மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மூன்று நாள்களுக்கு தி.மு.க-வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

தி.மு.க சார்பாக நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

இவரது உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

SHARE