தொலைதூரக்கல்வி ….காமராஜர் பல்கலைக்கழகம்…

நிர்வாக கண்காணிப்பாளர் சரோஜா கருப்பசாமி

4
267
சில்லாங்குளம்
Advertisement

கல்வி மையம்

Advertisement

சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழக தொலைதூரக் கல்வி மையம் தொடங்கப்பட்டது…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் கிராம புற இளைஞர்கள் தொலைதூரக் கல்வி பயிலும் வகையில் காமராஜர் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் தொடக்க விழா நடந்தது.

 விழாவுக்கு சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

முத்துகருப்பன் கல்வி அறக்கட்டளை செயலாளர்  பொன்னம்மாள், சுப்புலாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம், நிர்மலா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.

 தொலைதூரக் கல்வி மையத்தில் நிர்வாக கண்காணிப்பாளர் சரோஜா கருப்பசாமி குத்துவிளக்கேற்றி வைத்தார்.

 மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி மையத்தை முத்துகருப்பன் மேல் நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்

விழாவின் போது பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் உட்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்….

செய்திகள் :- ராரூ