செல்லப்பிராணிக்கு நடுகல் கண்டுபிடிப்பு

புதைந்த நிலையில்

0
43
Advertisement
செல்லப்பிராணிக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர்:

கி.பி., 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த, செல்லப்பிராணிக்கு சேர்த்து, எடுக்கப்பட்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார், முத்தமிழ், ராதாகிருஷ்ணன் ஆகியோர், கி.பி., 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, பேராசிரியர் பிரபு கூறியதாவது:
திருப்பத்தூர் அடுத்த, கிருஷ்ணாபுரம் சுடுகாட்டிற்கு அருகே, சாமுண்டியம்மன் கோவில் அருகே மண்ணில் புதைந்த நிலையில், ஏரிக்கரையில் நடுகல் ஒன்று உள்ளது.
இந்நடுகல், நாலரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் உள்ளது. கருப்பு கல்லில் செதுக்கப்பட்ட இதில், வீரனது உருவமும், அவனருகே, உடன் கட்டை ஏறிய, அவனது மனைவி உருவமும் உள்ளது.
வீரனது வலது கையில், கட்டரி குத்துக் கருவியும், இடது கையில் வாளை பிடித்தபடி உள்ளது. காதுகளில் காதணியும், கழுத்திலும், இடையிலும், ஆபரணங்களும் உள்ளது.
இந்நடுகல்லில் உள்ள பெண்ணின் வலது தோளில் அவர் வளர்த்து வந்த, கிளியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நடுகல்லில் பிராணிகள் உருவம் செதுக்குவது கிடையாது. ஆனால், தமிழர்கள் தாம் வளர்த்த கிளி போன்ற செல்லப்பிராணிகள் மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்துவதாக, இந்த நடுகல் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்