பல் கொள்ளை….தங்கபல்லர்கள் ஜாக்கிரதை….

நம்ம ஊரு தங்கபல்லர்கள்

Advertisement
Advertisement

மனித இனம் தோன்றிய காலம்தொட்டே திருட்டு, வழிப்பறி, கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், மோசடி, பொய்,பித்தலாட்டம் எல்லாம் உருவாகிவிட்டது…!

இது நாளோரு பொழுதாக உலகளாவிய அளவில், நவீன நாகரீக வளர்ச்சிக்கு ஒப்ப பரிணாமவளர்சியும் அடைந்துவருகிறதும் உண்மை….!

இதில் பகல் கொள்ளை என்பதை அனைவரும் அறிந்த ஒன்று….! ஆனால் பல் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது சமீபத்தில்….!

அது இங்கு அல்ல…..! பிரான்சில்.

பிரான்ஸ் உபெர்விலியே பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரைச் சுற்றி வளைத்த ஒரு கொள்ளைக் கும்பல், அவரிடமிருந்து செல்போனை முதலில் பறித்தனர். பின்னர் அவர் வாயில் தங்கப் பல் கட்டியிருப்பதை அறிந்து வாயை உடைத்து, தங்கப் பற்களை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து வந்து பாதிப்புக்குள்ளான நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், செல்போன் மற்றும் நான்கு தங்கப் பற்களை பறித்துச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த பல் கொள்ளை செய்தி….!

நமது லோக்கல் திருடர்களின் தொழில் அபிவிருத்திக்கு ஒரு பாடமாகக்கூட இருந்தால் ஆச்சரியம் இல்லை….!

எனவே நம்ம ஊரு தங்கபல்லர்கள் ஜாக்கிரதை….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119