பசும்பொன் தேசிய கழக இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பசும்பொன் தேசிய கழக தலைவர்

0
45
Advertisement

கோவில்பட்டி

தென் மாவட்டங்களில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை அடித்து படுகொலை செய்தும், கால்களை உடைப்பதாகவும்,

காவல்துறையினரின் இந்த போக்கினை கண்டித்தும், அவ்வாறு செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தலைவர் செல்வம் மீது பொய் வழக்கு போட்டு, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்தும்,

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பசும்பொன் தேசிய கழக இளைஞரணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதிராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
SHARE
M vellaipandian
கமுதி