ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டு பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

பரமக்குடி கிருஷ்ணா

0
373
Advertisement

கண்டன ஆர்ப்பாட்டம்

Advertisement

காஸ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா,  சங்பரிவார சமூக விரோத பாசிச பயங்கரவாத  கும்பலால்   கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும், பரமக்குடி அனைத்து முஸ்லிம்  ஜமாத், சமுதாய அமைப்புக்கள், உலமா பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று  21.04.2018 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் நடைபெற்றது.

பரமக்குடி ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.ஜே. ஆலம் தலைமை தாங்கினார்.

பரமக்குடி அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள்  முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி பரமக்குடி தொகுதி தலைவர் செய்யது இப்ராஹிம் கனி வரவேற்றார்.

கூட்டத்தில் ஆயிரவைசிய சபை தலைவர் ஆ. பாலுச்சாமி, சௌராஷ்டிரா சபை தலைவர் எம்.எஸ். கண்ணன், பரமக்குடி பங்கு தந்தை செபஸ்தியான், உலமா சபை மாவட்ட தலைவர் வலியுல்லா நூரி, தாலுகா பொருப்பாளர் ஜலாலுதீன் மன்பஈ,

வியாபாரிகள் சங்க செயலாளர் ராசி.என்.போஸ், அதிமுக தலைமை கழக பேச்சாளர் எம்.கே.ஜமால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உ. திசைவீரன், கே.வி.ஆர். ராம்பிரபு, திமுக நகர் செயலாளர் சேது. கருணாநிதி, மதிமுக மாவட்ட தலைவர் குணா,

எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்கர்அலி, சி.பி.ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கே.ராஜன், சி.பி.எம் தாலுகா செயலார் ராஜா, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெயினாலுபுதீன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பசுமலை, மனிதநேய மக்கள் கட்சி  மாவட்ட தலைவர் முகம்மது இக்பால்,

பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பசீர் அலி, பார்வார்டு பிளாக் மாவட்ட செயலாளர் லோகநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் கமால் முஸ்தபா, தமிழ்மாநில காங்கிரஸ் நகர் தலைவர் கோதண்டராமன்,

காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் அப்துல் அஜீஸ், விசிக மண்டல செயலாளர் முஹம்மது யாசின், வைகை பாசன விவசாய சங்கம் மாவட்ட செயல் தலைவர் பால்மரியதாஸ், மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சி நகர் செயலாளர் குயின் இப்ராஹிம்சா நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெண்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்.

SHARE
sm muthukumar
பரமக்குடி