H.ராஜாவை கண்டித்து ராணிப்பேட்டை ஆர்ப்பாட்டம்

சன்பரிவார்,RSS 

0
79
Advertisement

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Advertisement

திரிபுராவில் லெனின் சிலை அகற்றியது குறித்தும் தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும் என சர்க்குள்ளாகும் விதமாக பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் தொடர்ந்து தழிழகத்தின் அமைதியை குளைக்கும் வகையில் பதிவுகளை பதிவு செய்துவரும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும்.

கடந்த செவ்வாய் கிழமையான்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து இன்று பொதுநிறுவனமான ராணிப்பேட்டை பரத மிகுமின் நிறுவன வளாகத்தில் sc/st ஊழியர் சங்கம் ,obc தொழிலாளர்கள் நலசங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சங்கம் சார்பாக எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியர்கள் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.மேலும் மத,சாதி வெறியை அடிப்படையாக கொண்ட  சன்பரிவார்,RSS  போன்ற அமைப்புக்களை தடை செய்ய மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

SHARE
Rj suresh
வேலூர்