எது வறுமைக்கோடு..

38
621
வறுமை
Advertisement

எது வறுமைக்கோடு..

உண்மையில் வறுமை என்றால் என்ன? 

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாத போது வறுமையில் இருப்பதாகப் பொருள் என்பார்கள் சிலர், 

அடிப்படைத் தேவைகள் எஎன்றால் என்ன?

உண்ண உணவு, எடுக்க உடை, உறங்க ஒருஉறைவிடம்’  

இங்கே சொந்த வீடு என்பது பொருள் கொள்வது முறையல்ல. 

குறைந்தபட்சம் வாடகை கொடுக்குமளவு வசதியும், வருமானமும் இருந்தாலே போதுமானது.

ஆனால் வாடகைக்குக் கூட உறைவிடம் தேட முடியாமல் வீதியில் படுத்துறங்கும் நிலை என்பது நிச்சய வறுமை.

அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமது அரசாங்கத்தின் வறுமைக் கோட்டுக் கணக்கீடு அப்படி நினைக்கவும் இல்லை; கணக்கிடவும் இல்லை.

2005-06 ஆம் நிதியாண்டில் நகர்ப்புறத்தில் மாத வருமானம் ரூ 560 க்குக் குறைவாகவும்,

கிராமப் பகுதிகளில் ரூ368 க்குக் குறைவாகவும் சம்பாதிக்கும் மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோர் என்று வரையறுக்கிறார்கள்.

நகர்ப் புறத்தில் 561 ரூபாய் சம்பாதிக்கிறவன் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவனாம். 

இந்த வரையறை நடைமுறை நிலவரத்தை ஏளனம் செய்வது போலுள்ளது. 

 வறுமை கோட்டை வரையறை செய்வது, வறுமையை கேடாக்கும் செயல் என்றால் மிகையாகாது.

எனினும் எதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது

தகவல்கள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE