தீரன் சினிமாவுக்கு எதிர்ப்பு…சீர்மரபினர் நலச்சங்கத்தினர்

சீர்மரபினர் நலச்சங்கத்தினர்:

0
279
Advertisement

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைத் தடைசெய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு:

சமீபத்தில் தீரன் என்ற படம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சதுரங்க வேட்டை வினோத் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார்.  இப்படத்தில் குற்றப்பழங்குடி இனங்களைத் தவறாகச் சித்தரித்துக் காட்டியுள்ளனர்.

இந்தியாவில் ராஜ்புட், ஜாட், பட்டுவா, பன்னாரி, அகிர் என்ற யாதவ சமுதாயம் போன்ற வடமாநில சமுதாயங்கள் பற்றியும், தமிழகத்தில் வேட்டைக்காரர் என்ற சமுதாயத்தைப் பற்றியும் தவறாகச் சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி தவறாகச் சித்தரித்து அதாவது பிறவிலேயே இவர்கள் கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடும் குற்றப் பரம்பரைகளாகப் போலி வரலாறு எழுதப்பட்டது. இப்போலி வரலாறு உண்மை என்பது போல் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தைப் பாராட்டி ஊடகங்களும் ஆகாஓகோ என்று விமர்சித்து வருகின்றனர்.

சீர்மரபினர் நலச்சங்கத்தினர்:

தமிழகத்தில் குற்றப்பரம்பரையாகக் குற்றம் சுமத்தப்பட்ட 68 சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சீர்மரபினர் நலச்சங்கம் செயல்படுகிறது. இந்த மக்களின் கல்வி, பொருளாதார மற்றும வாழ்வாதார உயர்வுக்காகப் பலகட்ட போராட்டங்களை நடத்தியும், நீதிமன்றங்கள் மூலமாக சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இப்படத்தை தடைசெய்யக்கோரி ஆட்சியரிடம் இச்சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது.

அடுத்த கட்டமாக மற்ற மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடத்தி அரசின் பார்வைக்கு கொண்டுசெல்லவுள்ளனர்.சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கூறுகையில், இதனால் மற்ற சமுதாய மக்களின் பார்வை இவர்களைப் பற்றி தவறான கண்ணோட்டமாக அமையும். இந்தியா முழுவதும் சட்ட ஒழங்குப் பிரச்சனைகள் உருவாகக்கூடிய வாய்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 252 சமுதாய மக்கள் வாழ்கின்றனர். இவர்களே உலக அளவில் பண்பாடு, கலாச்சாரம் ,  நாகரீகம் தோன்றுவதற்கு முன்னோடிகள்.

இவர் இனக்குழுக்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட பூர்வபழங்குடிகள். தமக்கென்று எல்லைகளை வகுத்துக்கொண்டு ஆட்சி செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயமும், காவலுமே இவர்களுடைய குலத்தொழிலாக விளங்கின. ஆங்கிலேய ஆட்சியில் இவர்களை ஒடுக்கி அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத சூழ்நிலையில். இவர்களைப் பற்றி தவறாகச் சித்தரித்து அதாவது பிறவிலேயே இவர்கள் கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் குற்றப் பரம்பரைகளாகப் போலி வரலாறு எழுதப்பட்டது.

இப்போலி வரலாறு உண்மை என்பது போல் இப்படத்தில் காட்டப்பட்டுள்து. சினிமா சட்டம்  1952ன் சரத்13(1)ன் கீழ் மாவட்ட ஆட்சியரே தடைசெய்வதற்கு அதிகாரம் உள்ளது.  சினிமா சட்டம 1952 விதி 5b(2) மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின் படி இதுபோன்ற காட்சிகளோ. உரையாடலோ எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ, சமுதாயக்குழுக்களையோ புண்படுத்துவது மாதிரியோ,  இழிவுபடுத்தியோ காட்டுவது குற்றமாகும்.

ஆகையால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறோம், தமிழகம் முழுவதும் ஆரப்பாட்டங்களும் நடத்தவுள்ளோம் என்று தெரிவித்தனர்.

செய்திகள்:- கோபிநாதன் முதுகுளத்தூர்

Advertisement
SHARE