இன்றய ராசிபலன்கள்

வியாழக்கிழமை21.12.2017

0
177
Advertisement
Advertisement

ஸ்ரீஹேவிளம்பி, மார்கழி -6ம்நாள், வியாழக்கிழமை21.12.2017
சந்திராஷ்டமம்:-திருவாதிரை, புனர்பூசம்
———————————————————————————————-

மேஷம் :

அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு                               
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மேன்மையான நாள்.
பரணி : பணிகளில் இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம் :

புனித யாத்திரை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் துறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். வர்த்தகங்களில் மத்தியமான தனலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு.                                       
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : புகழப்படுவீர்கள்.
ரோகிணி : பணிகளில் மந்த நிலை உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.

மிதுனம் :

எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : மன தைரியம் அதிகரிக்கும்.
திருவாதிரை : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் : ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.

கடகம் :

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம் :

பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு                                           
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
பூரம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.

கன்னி :

வாகன பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வரும். நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான நாள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : திறமை வெளிப்படும்.
சித்திரை : அனுகூலமான நாள்.

துலாம் :

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபட முயற்சி செய்வீர்கள். தாயின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு                                       
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : பிறரின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம் :

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் புகழ் உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : வீர, தீரச் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : பொருள் சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.

தனுசு :

புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு                                                
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : புதிய நட்புகள் உண்டாகும்.
பூராடம் : சாதகமான சு ழல் அமையும்.
உத்திராடம் : காரிய சித்தி உண்டாகும்.

மகரம் :

கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பணிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : தூர தேசத்து பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : பணிகளில் கவனம் தேவை.
அவிட்டம் : சுப செயல்களில் ஈடுபடுவீர்கள்.

கும்பம் :

மூத்த சகோதரர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான  சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : மனக்கவலை குறையும்.
சதயம் : சுபமான நாள்.
பூரட்டாதி : உறவு மேம்படும்.

மீனம் :

மூத்த சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும். கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : பயணம் மேற்கொள்வீர்கள்.
ரேவதி : உயர் பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜோதிடர்:- பிரகாஷ் ஜெயராமன்