(மாடு) பிரச்சனையிலாவது தகுந்த நடவடிக்கை எடுங்க கலெக்டர் சார்….

0
95
Advertisement

வேலூா்

வாலாசாபேட்டை நகரத்தில் பரவலாக மணல் கொள்ளை & கல்குவாரி முறைகேடு மற்றும் கேரளா போலி லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை போன்ற எதற்கும் உங்களால் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது என்பது எனக்கு தொியும் எனவே இந்த சாதாரண மக்கள் (மாடு) பிரச்சனையாவது தகுந்த நடவடிக்கை எடுங்க சார்….
வாலாசா பொதுமக்களின் ஆதங்கம்
வேலூர் மாவட்டம் வாலாசாபேட்டை  நகராட்சியின் தினசரி _காய்கறி_மார்கெட் & அதனை சுற்றிள்ள பூமார்கெட் மற்றும் வேலூர் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையான எம்_பி_டி_சாலையில் கால்நடைகளால்(காளைமாடு & மாசுமாடு) தினமும் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் என  எல்லோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இன்று மாலை எடுக்கப்பட்ட இந்த வீடியேவை பார்த்தால் வாலாசாபேட்டை மக்கள் மற்றும் அனைத்து வாகன ஒட்டிகள் எவ்வளவு பாதிப்பு அடைக்கிறார்கள் என தொளிவாக புரியும் எனவே வேலூா் மாவட்ட ஆட்சியா் திரு.ராமன் அவா்கள் உடனடியாக இந்த விவகரத்தில் தலையிட்டு கால்நடைகளை பறிமுதல் செய்து மாவட்ட கால்நடை காப்பகத்தில் வைத்து பரமரிக்கவேண்டும் அல்லது கால்நடைகளின் உரிமையாளர்களை அழைத்து  கண்டிப்புவுடன் கூடிய எச்சரிக்கை செய்து இனி இதுபோன்று விபத்துக்கள் சாலைகளில் நடைபெறது வண்ணம் வாலாசா வாழ் பொதுமக்களின் வாகன பயணத்தை பாதுகாப்புவுடன் செல்ல உறுதி அளிக்கவேண்டும்…
குறிப்பு : இந்த விடியேவை பார்க்கும் போது இறுதியில் ஒரு அக்காவை மாடுகள் சண்டையில் முட்டி தள்ளியது  இதில் அவரின் கணுகாலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…..
மேலும் இந்த மாடுகளின் விவகரத்தில் வாலாசாபேட்டை நகராட்சி ஆணையாளர் மற்றும் வாலாசாபேட்டை காவல்துறையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் அதிமுக_திமுக வின் நிறுவாகிகளின்  நேரடி மற்றும் மறைமுக ஆதாரவு  உள்ளது…..
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்