கமிஷனர் நடவடிக்கை….! கலக்கத்தில் போலி பத்திரிகையாளர்கள்..

பெரியய்யா I.P.S

Advertisement
Advertisement

நன்மை- தீமை, அமுது- விஷம், இப்படியான நெகடிவ்-பாசிடிவ் தான்…!, உலகத்தை இயக்கிவருகிறது எனும் அரியதொரு தத்துவத்தை, நமது சமூகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகைத்துறையில் ஊடுருவி விட்ட புல்லுருவிகளால் நாள்தோறும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் நிருபர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் என்றால்….!  சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு…..!

பத்திரிகைகளின் பலத்தையும், அந்தஸ்து மற்றும் ஆளுமையை நன்கு கூர்ந்து கவனித்த, டூப்பு…. டுப்பாக்கோர்கள்.

கள்ளநோட்டு அச்சடிப்பது போல்….! கழிசடை பத்திரிகைகளை அச்சிட்டு, முதல் முதலில் அரிதாரம் பூசிக்கொண்ட கருப்பு-வெள்ளை சினிமா, கூத்தாடிகளிடம், தனது கையெழுத்து வித்தையில், காசு பணம் பார்த்தனர்…!

( அதில் லச்சுமிகாந்தன் எனும் எழுத்து விபச்சாரன் கொலை செய்யப்பட்ட வரலாற்றை இன்றைய இளம் எழுத்தாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்வது நல்லது)

உடலை விற்று பிழைப்பு நடத்தும் அபலைகளையும் விட்டுவைக்காத,  இந்த வேசி எழுத்து வியாபரிகளிடம், சிக்கிக்கொண்டது.பத்திரிகைத்துறை…! .
தொடர்ந்து 1967 – க்கு பிறகு மாறிவிட்ட அரசியல் நாகரீகத்தில், உளுத்துப் போன ஊழல்வதிகளிடம், தனது பிச்சைகரத்தை நீட்டி அவர்களது எச்சத்தை தின்று இன்று கோடீஸ்வரன்களாக வளம் கண்ட வராகர்கள் பலர் உண்டு…!

100 க்கு 98 சதவீதம் நிர்வாணமாகி விட்ட பத்திரிகைத்துறையில்,இன்று 2 சதவீத பத்திரிகைகளில் இருப்பவர்கள் கட்டி இருக்கும், இடுப்புத்துண்டை பார்த்து, இவர்கள் ஏமாளிகள்…! கோமாளிகள்..!  என்று,98 நிர்வாணிகள், கேலி கிண்டல் செய்வதுதான் இன்றைய கொடுமையில் கொடுமை..!

பெரியய்யா I.P.S

இதுபோன்று நிர்வாணமாக கூத்தடிக்கின்ற….! லெட்டர்பாக்ஸ் பத்திரிகை துரோகிகளை, கோவை மாநகர காவல்துறை ஆணையர் கு. பெரியய்யா I.P.S, உத்தரவில் கோவை மாநகர போலீஸ்காரர்கள்  களத்தில் இறங்கி உள்ளது சிறப்பு செய்தியாகும், என்றனர் 2 சதவீதம் உள்ள இடுப்பு துண்டு எழுத்தாளர்கள்…!

பத்திரிகையாளர் என்றால், குடிபோதையில் வண்டி ஓட்டுவது, ஓன்வேயில் ஒய்யாரமாக செல்வது, சாதரணமான சட்டத்தை கூட மதிக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்காக, அரசு எழுதாத சட்டமாக்கப்பட்டு  விட்டதா..? என்று நகர பொது மக்களுக்கு ஒரு சந்தேகம் இருப்பது என்னவோ உண்மை தான்…!

காரணம் படத்தை பாருங்கள் உடனே புரிந்துகொள்ளமுடியும், ஹெல்மெட்டை துறந்து எந்த கவலையும் இல்லாமல் செல்லும் அந்த PRESS பேபிக்கு முன்னால் செல்லும் 11-ம் நம்பர் பஸ் சடன்பிரேக் போட்டால்….?????

PRESS பேபியின் தலை Presssssss ஆகி  அதாவது தலை நசுங்கி கந்தலாகி 108 ல் தானே செல்ல வேண்டும்..!

PRESS என்பதால் தலை நசுங்காதா…????என்பதுதான் நகர மக்களின் பில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று….!கோவை மாநகர காவல்துறை ஆணையர் கு. பெரியய்யா I.P.S, எடுத்துள்ள, இந்த அதிரடி பத்திரிகைதுறையில் ஊடுருவி விட்ட பதர்களுக்கு….! வயிற்றில் புளியை குறைத்துள்ளது…! கூடவே பகீர்…. பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

இதுபோல் தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் வேண்டும் என்று, மானமுள்ள பத்திரிகையாளர்கள் மனம் வெதும்பினார் நமது செய்தியாளரிடம்….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119