தமிழகத்தில்  விரைவில் வருகிறது அதிரடி சோதனை……

வக்கீல் , போலீஸ்

Advertisement

போலி பத்திரிக்கையாளர்கள் ,வக்கீல் , போலீஸ்

Advertisement

போர்வையில்  வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வளம் வரும் ஆசாமிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை வர உள்ளது.

தமிழகம்  முழுதும் செயின் பறிப்புகள் , வேகமாக பைக் ஓட்டுவது , கொலை  கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரஸ் ஸ்டிக்கர் , வக்கீல் ஸ்டிக்கர் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி தப்பிக்கின்றனர்.

இதை தடுக்க  போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.  போலீசார் வாகன சோதனையில் மடக்கினால் பெரும்பாலானோர் பிரஸ் ஸ்டிக்கர் , போலீஸ் , வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

அவர்களை போலீசார் மடக்கி விசாரிக்கும் போது நான் யார் தெரியுமா பிரஸ்சு என மிரட்டுவதும் , வக்கீல் போலீஸ் என மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் எதற்கு வம்பு என்று போலீசார் இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களை மடக்குவதில்லை.

பத்திரிக்கையாளர்கள் ஒரு இடம் செல்லும் போது அவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக பிரஸ் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

இதே போல் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் மூலம் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. போலீசாருக்கு ஸ்டிக்கர் வழங்கப்படுவதில்லை.

ஆனால் போலீசார் ஸ்டிக்கர்களை பார்த்து வாகனங்களை பிடிக்காமல் விடுவதை பார்த்து பலரும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

நாளடைவில் பிரஸ் ஸ்டிக்கர் , வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டினால் போலீஸ் பிடிக்கமாட்டார்கள் என்பதால் சகலரும் ஸ்டிக்கரை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதன் விளைவு மீடியாவுக்கு  , வக்கீல் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத சுண்டல் விற்பவர் , மளிகை கடை நடத்துபவர் , சாலையோரம் பேப்பர் பிரிப்பவர் , சமூக விரோதிகள் , குற்றவாளிகள் , இரவில் மது அருந்தி விட்டு போகும் போது போலீஸ் மடக்காமல் இருக்கவும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களை ஓட்டுகின்றனர்.

தற்போது பல்வேறு பகுதிகளில்  செயின் பறிப்பு மற்றும் வாகன விதிமீறல்களில் இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாகனம் ஓடுபவர்கள் அதிகம் உள்ளதால் போலீசார் இத்தகைய போலி ஆசாமிகளை களையெடுக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும்  ஆயிரக்கணக்கில் இத்தகைய போலி ஸ்டிக்கர் ஆசாமிகள் வாகனங்களை இயக்கி வருவதால் கடுமையான வாகன சோதனை நடத்தி போலிகளை களைய வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் கடுமையான சோதனை இருக்கும் என்று அந்த தகவலிலிருந்து தெரிந்து கொண்டும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119