சுத்தம் சுகாதாரம்-ஈஷா ஹோம் ஸ்கூல்

விழிப்புணர்வை ஏற்படுத்தும்

Advertisement

விழிப்புணர்வு நாடகம்

Advertisement

ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் ஈஷா யோகா மையத்தின் அருகாமையிலுள்ள செம்மேடுகிராமத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குப்பை என்ற
நாடகத்தை மார்ச் 11ம் தேதி (ஞாயிற்று கிழமை ) அரங்கேற்றினர்.

இம்மாணவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இந்த குப்பை நாடகத்தை அரங்கேற்றி கிராம மக்களுக்கு சுத்தம் மற்றும்சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதோடு கிராமங்களில் துப்புரவு பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் ஈஷா அவுட்ரீச் சார்பில் 2016ம் ஆண்டு முதல் ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டாரகிராமங்களில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை பிரித்து போடவீடுவீடாககுப்பைகூடைகள்வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈஷா அவுட்ரீச் மூலம் இக்கிராமங்களில் அன்றாடம் வீடு வீடாக
குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது.

கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. .

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119