கோவை ஈஷா வித்யா பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

சத்குரு

Advertisement
Advertisement

 

குழந்தைகள் தின சிறப்பு விழா கோவையின் சந்தேகவுண்டன்
பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா மேனிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவர்களுக்காக ஆசிரியர்கள் பங்கேற்று வழங்கியகவிதைகளும்,பாடல்களும் நடனமும் நடைபெற்றன.

கல்வி உதவித்தொகை

இதனால் குழந்தைகளின்மகிழ்ச்சி பன் மடங்கு ஆனது குறிப்பிடத்தக்கது .மற்றும் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு திரு.சத்தியவதி,Regional Manager LIC
திரு.பசுலுரகுமான்,திரு.சீனிவாசராவ் Marketing Manager LIC/SDM,CBE.திரு.கிரி
மாணிக்கவாசகம்,திரு.பிரசாத்,திரு.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு
மாணவர்களுக்கு  பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். LIC மூலம்
குழந்தைகள் தின பரிசாக புத்தகங்களும் பள்ளிக்கு அளிக்கப்பட்டது.

ஈஷா வித்யா பள்ளி கிராமப்புற குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக
ஈஷா யோக மைய நிறுவனர் திரு.சத்குருஅவர்களால் 2006 ஆம் ஆண்டு
துவக்கப்பட்டது.தமிழகத்தில் மொத்தம் 8 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இங்கு பயிலும் 7158 மாணவர்களில் 61% பேர் கல்வி உதவித்தொகையுடன் பயின்றுவருகின்றனர் என்பது தனி சிறப்பு.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119