ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் தடை-நீலகிரி பாரதிய ஜனதா

தேயிலை வாரியத்தின் மூலம் அதிகபட்ச பயன்களை விவசாயிகளுக்கு பெற்றுத்தருவது.

Advertisement
Advertisement

ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்-நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி  நிர்வாகிகள் கூட்டத்தில்  தீர்மானங்கள்.

பாஜக விவசாய அணியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஊட்டி தொட்டபெட்டா கோடப்பமந்து சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

தேயிலை தோட்டவிவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலுள்ள குறைகளை களைவது,இயந்திரங்களை நவீனப்படுத்தி தேயிலைத்தூளின் தரத்தை மேம்படுத்துவது,தேயிலை வாரியத்தின் மூலம் அதிகபட்ச பயன்களை விவசாயிகளுக்கு பெற்றுத்தருவது.

இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது,இயற்கை பூச்சிமருந்துகள் தயாரிக்க பயிற்சியளிப்பது,நாட்டு மாடுகள் வளர்ப்பதை ஊக்குவிப்பது,கோசாலை அமைத்து ஆதரவற்ற மாடுகளை பராமரிப்பது,மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்பது.

சிறு தேயிலை விவசாயிகளை ஒருங்கிணைத்து நேரடி ஏற்றுமதியை ஊக்குவிப்பது,நீலகிரி மாவட்டத்தை ரசாயன பூச்சிக்கொல்லி,உரங்கள் பயன்பாட்டை தடை செய்ய மத்திய அரசை வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்களோடு இதற்கென குழு பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டார்கள்.

தேயிலை சம்பந்தமாக S.மகாலிங்கம் எடக்காடு,இயற்கை வேளாண்மை-சபிதா போஜன்,நீராதாரம் மற்றும் மேய்ச்சல் நில மீட்பு-பிரபு,மலைத்தோட்ட காய்கறிகள்-ஜெகதீஷ்.

மேற்கண்டவர்கள் இது தொடர்பாக நேரடியாக விவசாயிகளை சந்தித்து,ஆய்வு செய்து பத்து பேர் கொண்ட குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விவசாய நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரடியாக சந்திப்பது எனவும்,கிளை வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது எனவும்,ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட தலைவர்          – மோகன்,

மாவட்ட பொதுச்செயலாளர் – ஜெகதீஷ்

மாநில பொதுச்செயலாளர்  – நல்லசிவம்,பிரபு

மாவட்ட பொறுப்பாளர் – வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.     

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119