முதல்வருக்கு காசோலை…தேர்தல் மன்னன் ஏ.நூர்முகம்மது…

EX.M.P.,M.L.A.,

Advertisement
Advertisement

முதலமைச்சருக்கு காசோலை கொடுக்க காத்திருக்கிறார்…..!  EX.M.P, M.L.A., வேட்பாளர் .என்று கேள்விபட்டதும் அவரை சந்தித்தோம்.

அதற்கு முன் யார் இந்த EX.M.P.,M.L.A.,???

இவர்ஒரு தொழில் அதிபர் இவருக்குதமிழக தேர்தல் களங்களில் தனி இடம் உண்டு.நடந்தது முடிந்த பல தேர்தலில் நின்று தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்.

அவர்தான் கோவை ஏ.நூர்முகம்மது…

இவருக்கு  மக்களிடம் பெரிய அரசியல் செல்வாக்கு இல்லையென்றாலும், தனி மனிதராக  முடிந்தளவுக்கு கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை நடந்த தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு தோற்று இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் மனு தாக்கல் செய்யும் போது மாட்டு வண்டி, ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து மக்களை கவர்வதில் வல்லவர்.

மக்கள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர் குறிப்பாக லோக்கல் அரசியல்வாதிகளின் கோபத்தையும் ஆத்திரத்தையும் கடுப்புகளையும் அதிகம் சம்பாதித்து அவர்களால் நன்கு கவனிக்கப்பட்டவர்.

பல முறை சாதனைக்காக தேர்தல்களில் நின்று இருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை என்ற போதும் தேர்தல் மன்னன் என்ற பட்டத்தை வென்றவர் தான், கோவைஏ.நூர்முகம்மது….!

சரி விஷயத்துக்கு வருவோம்..!

சமிபத்தில் தழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது,  தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டது.

அப்போது முறையான அனுபவமற்ற இவர்களால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டது.அந்த இக்கட்டான நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநராக அவதாரம் எடுத்தவர்,  கோவை தேர்தல் மன்னன் ஏ.நூர்முகம்மது

பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தற்காலிக ஓட்டுநராகச் சேவை செய்ததாகக் கூறுகிறார்…. ஓட்டுநர் மற்றும் தேர்தல் மன்னன் ஏ. நூர் முகம்மது

இது குறித்து அவர் நமது ” தமிழ்செய்தி” மின்னிதழளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

“பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேருந்து இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஓட்டுநராக 9 நாட்கள் பணியாற்றினேன் . மக்களுக்கு சேவை செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

மக்கள் பணியே மகேசன் பணி….!  மக்கள் பணி செய்பவர்கள் சுக, துக்கத்தைக் கடந்து பணிபுரிகின்றனர்.

அரசோடு இணைந்து மக்கள் செய்யும் பணியே மக்களாட்சி.
மக்களுக்கான சேவையே மானிடத்தில் அளப்பரியது.
மக்களுக்கு சேவை செய்யவே பேருந்து ஓட்டினேன்.

இதன் மூலம் கிடைத்த 9 நாட்கள் ஊதிய பணம் 3ஆயிரத்து924 ரூபாய் பணத்தை ஆதரவற்றோருக்கு வழங்க உள்ளேன்” அதை முதலமைச்சர் கையில் கொடுக்க காத்திருக்கிறேன் என்றார் நூர்முகம்மது.

மேலும் அவர் கூறியதாவது;-

பாகுபாடு இன்றி தமிழாக M.L.A., 234, பேர்களும் 40 M.P.,கள் மற்றும் அரசு அனைத்து ஊழியர்கள் தனியார் துறைகளில் பணிபுவோர் அனைவரும் ஆண்டுக்கு ஒரு நாள் சம்பளத்தை, அரசு நிதிக்கு  வழங்க முன்வரவேண்டும் .
இது அரசு நிதி பற்றாக்குறையை ஒரளவுக்கு குறைக்கும் என்றார் தேர்தல் மன்னன் ஏ. நூர்முகம்மது….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119